Karthick Fooled Vijayakanth The Actor Who cheated Six Directors: நவரச நாயகன் கார்த்திக், 6 இயக்குனர்களை ஒரே நேரத்தில் ஏமாற்றியதாக இயக்குனர் பாரதி கண்ணன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், வாரிசு நடிகராக அறிமுகமானவர் நவரச நாயகன் கார்த்திக். பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக், நடிக்க வந்த பின்னர் முரளி என்கிற தன்னுடைய பெயரை கார்த்திக் என மாற்றி கொண்டார். இவரை தமிழ் சினிமாவில் 1981-ஆம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தது இயக்குனர் பாரதிராஜா தான். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து கார்த்திக் நடித்த படங்கள் ஹிட் லிஸ்டில் இணைந்தது.
25
கார்த்திக்கின் ஹிட் படங்கள்:
குறிப்பாக அக்னி நட்சத்திரம், கிழக்கு வாசல், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூவேலி, மேட்டுக்குடி, போன்ற பல படங்கள் கார்த்திக்கை 90-களின் முன்னணி நடிகராக மாற்றியது. அந்த காலகட்டத்தில் இவருடைய கால்ஷீட்டுக்காக ஏராளமான இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்துக்கிடந்தனர். இதையே தனக்கு சாதமாகமாக பயன்படுத்தி கொண்ட, கார்த்திக் பல படங்களில் நடிப்பதாக அட்வான்ஸ் வாங்கி வைத்துக்கொண்டு ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
35
சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நடிகர்:
சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத ஹீரோவாக அறியப்பட்ட நடிகர் கார்த்திக் குறித்து, பிரபல இயக்குனர் பாரதி கண்ணன் கூறியுள்ளார். இவர் 1996-ஆம் ஆண்டு வெளியான அருவா வேலு படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதை தொடர்ந்து கண்ணாத்தாள், திருநெல்வேலி, ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி போன்ற படங்களை இயக்கி உள்ளார்.
45
விஜயகாந்திடம் சென்ற பிரச்சனை:
இவர் நடிகர் கார்த்திக்கை வைத்து ஒரு படம் இயக்க முடிவு செய்தார். கதையை கார்த்திக்கிடம் கூற அவரும் ஓகே என சொல்லி... அட்வான்ஸ் வாங்கி கொண்டார். ஆனால் மனுஷன் குடி, கும்மாளம் என இருந்ததால், திரைப்படங்களில் நடிக்கவில்லையாம். இதுகுறித்து அப்போதைய நடிகர்சங்க தலைவராக இருந்த விஜயகாந்திடம் பிரச்னையை எடுத்து செல்ல... அவர் கார்த்தி மற்றும் இவருக்கு அட்வான்ஸ் கொடுத்து படம் இயக்க காத்திருந்த 6 இயக்குனர்களையும் அழைத்து பேசியுள்ளார்.
55
6 இயக்குனர்களுக்கு நாமம்:
அங்கு வந்த கார்த்திக், தன்னுடைய மேனேஜரிடம் சொல்லி... ஒரு வெள்ளை பேப்பரை கொடுக்க சொல்லி அட்வான்ஸ் வாங்கிய 6 இயக்குனர்களுக்கும் கால்ஷீட் கொடுத்து விட்டதாகவும், கண்டிப்பாக நடித்து கொடுத்து விடுவேன் என சொல்லி விஜயகாந்திடம் இருந்து தப்பித்துள்ளார். அதன் பின்னர் சொன்னபடி படங்களை நடித்து கொடுக்காமல் கடைசிவரை அந்த வெள்ளை பேப்பரை கையில் வைத்து கொண்டு இப்போது வரை இருப்பதாக இயக்குனர் பாரதி கண்ணன் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.