யூடியூப்பில் 1.6 மில்லியனை கடந்து சாதனை படைத்த மிஷ்கின் பாடிய பாடல்!

Published : Jul 13, 2025, 12:07 PM IST

Mysskin Song Eduda Bottle Video Crosses 1.6 Million : மிஷ்கின் பாடிய பாடல் ஒன்று யூடியூப்பில் 1.6ம் மில்லியன் வியூஸ் கடந்து சாதனை படைத்து வருகிறது. அது எந்த பாடல், என்ன படம் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
லவ் மேரேஜ் படத்தில் மிஷ்கின் பாடிய பாடல்

Mysskin Song Eduda Bottle Video Crosses 1.6 Million : இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் கடந்த ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் லவ் மேரேஜ். மிகவும் எளிமையான கதை, எதார்த்தமான காட்சிகளுடன் திரைக்கு வந்த இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாக்‌ஷி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரியோ ராஜ் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.

சீன் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த எடுடா பாட்டில் என்ற பாடலை மிஷ்கின் தனது குரலில் பாடியிருந்தார். இந்தப் பாடல் இப்போது யூடியூப்பில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. எடுடா பாட்டில் பாடலுக்கு மோகன் ராஜன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

25
மிஷ்கின் சாங்

மிகவும் எளிமையான கதை மற்றும் சிறிய பட்ஜெட் என்று இந்தப் படம் வெளியானது. என்னதான் ரசிகர்களிடையே நல்ல விதமான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சாக்னிக்.காம் செய்தியின் படி படம் வெளியாகி 7 நாட்களில் இந்தியளவில் ரூ.1.04 கோடி மட்டுமே வசூல் குவித்திருக்கிறது.

35
மிஷ்கின் பாடல்

படத்தின் ஹீரோவான விக்ரம் பிரபுவிற்கு வயது அதிகமான நிலையில் திருமணம் நடப்பதில் தாமதமாகும். அப்படி ஒரு பெண் ஓகே ஆகும் போது, அந்த பெண் வேறொரு பையனை காதலிப்பது தெரிந்து நடக்கும் சம்பவங்களும், அந்த பெண்ணின் தங்கையை ஹீரோ திருமணம் செய்து கொள்வதும் இயல்பான எதார்த்தமான காட்சிகள். அப்படி எதார்த்தமான காட்சிகளுடன் இந்தப் படம் வந்திருந்தாலும் காமெடி காட்சிகள், ரொமான்ஸ், பாடல் என்று எல்லா அம்சங்களும் படத்தில் நிரம்பியிருந்தது.

45
மிஷ்கின் பாடிய பாடல்

எனினும், படம் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று இயக்குநர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருக்கிறார். லவ் மேரேஜ் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட வேண்டியது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற படம். 35 வயதாகியும் இன்னும் திருமணம் நடக்காமல் இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை இந்தப் படம் சித்தரிக்கிறது. அதாவது காலதாமதமாகும் திருமணத்தைப் பற்றிய படம் தான் லவ் மேரேஜ்.

55
மிஷ்கின் பாடிய எடுடா பாட்டில் பாடல்

குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி ஆகிய படங்களின் வரிசையில் இடம் பெற வேண்டிய படம் தான் லவ் மேரேஜ். ஆனால், குபேரா மற்றும் மார்கன் ஆகிய படங்களால் குறைவான திரையரங்குகள் கிடைக்கப் பெற்றது. இருந்த போதிலும் ஓரளவு டீசண்டான வசூல் தான் பெற்று வருகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories