இன்னும் படமே ரிலீஸ் ஆகல; அதற்குள் டிரெயின் பட கதையை லீக் பண்ணிய மிஷ்கின்!

Published : May 13, 2025, 01:15 PM IST

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள டிரெயின் திரைப்படத்தின் கதையை இயக்குனர் மிஷ்கின் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருக்கிறார்.

PREV
14
Mysskin Opens Up About Vijay Sethupathi Train Movie

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள படம் டிரெயின். இப்படத்தை மிஷ்கின் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். ரெயில் பயணத்தை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கி உள்ளார் மிஷ்கின். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை இயக்கியதோடு அதில் இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார் மிஷ்கின். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

24
டிரெயின் படத்தின் கதை

இந்த நிலையில், சமீபத்தில் பட விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின், டிரெயின் படத்தின் கதையை கூறி இருக்கிறார். டிரெயின் முழுக்க முழுக்க ரெயில் பயணத்தை பற்றிய கதை என்றும், ஒரு ராட்சத புழு எப்படி தன்னுடைய பிள்ளைகளை வயிற்றில் சுமந்துகொண்டு தவழ்ந்து தவழ்ந்து சென்று பத்திரமாக வெளியே விடுகிறதோ... அதேமாதிரி தான் டிரெயின் படத்தின் கதையையும் எழுதி இருப்பதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

34
டிரெயின் பட ஒன்லைன்

டிரெயின் படத்தின் கதை என்னவென்றால், வாழவே விருப்பம் இல்லாத கதாநாயகன், மரணத்தை நோக்கி பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அந்த ரெயில் பயணம் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன் என மிஷ்கின் தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், இப்படி ஒரு வெளிப்படையான டைரக்டரை பார்த்ததில்லை. படமும் நிச்சயம் ஃபீல் குட் படமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

44
மிஷ்கின் இசையமைக்கும் டிரெயின் படம்

டிரெயின் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் நாசர், கே.எஸ்.ரவிக்குமார், கலையரசன், யூகிசேது, நரேன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஃபெளசியா பாத்திமா பணியாற்றி உள்ளார். இது மிஷ்கின் இசையமைக்கும் இரண்டாவது படம் ஆகும். இதற்கு முன்னர் அவர் டெவில் என்கிற படத்துக்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories