தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. அவருக்கு 40 வயது ஆன போதிலும் அவருக்கு தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது தமிழில் ராக்காயி, மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் தயாராகி வருகிறது. அதேபோல் மலையாளத்தில் டியர் ஸ்டூடண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்து வரும் அவர், கன்னடத்தில் உருவாகி வரும் டாக்ஸிக் என்கிற பான் இந்தியா படத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில், அவரைப் பற்றிய ஒரு அதிர்ச்சி தகவலை வலைப்பேச்சு அந்தணன் வெளியிட்டு இருந்தார்.
24
அண்ணாத்த படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா
ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம் அண்ணாத்த. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய தோல்வியை சந்தித்தது. இப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அந்தணன் தனது யூடியூப் சேனலில் கூறி உள்ளார். அதன்படி, படப்பிடிப்பின் போது ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாம். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த இடைவேளையில் நயன்தாரா கேரளாவுக்குச் சென்றிருக்கிறார். சில நாட்களுக்குப் பின் ரஜினிக்கு உடல்நிலை சரியாகி அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியும் என்ற நிலை வந்ததும், நயன்தாராவை படப்பிடிப்புக்கு வரச்சொல்லி தயாரிப்பாளர்கள் அழைத்திருக்கிறார்கள்.
34
தனி விமானம் கேட்ட நயன்தாரா
ஆனால் ஐதராபாத்துக்கு திரும்பி வர தனியார் ஜெட் விமானம் வேண்டும் என்று நயன்தாரா கேட்டாராம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்திற்கு ஒரு பட்ஜெட்டை நிர்ணயித்தது என்றால் அதற்கு மேல் அவர்கள் செலவு செய்ய மாட்டார்கள். எனவே பிசினஸ் கிளாஸ் டிக்கெட் போட்டுக் கொடுப்பதாகக் கூறி இருக்கின்றனர். ஆனால் நயன்தாரா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். மறுபுறம் சன் பிக்சர்ஸும் தனி விமானத்திற்காக செலவு செய்ய முடியாது என்பதில் தீர்க்கமாக இருந்ததாம்.
இது ஒரு பெரிய பிரச்சினையாக மாறி, விஷயம் இயக்குனர் சிவா காதுக்கு சென்றிருக்கிறது. பின்னர் அவர்தான் இறுதியில் தீர்வு கண்டிருக்கிறார். அதன்படி படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பிறரின் செலவுகளைக் குறைத்து, அதில் இருந்து கிடைத்த பணத்தை வைத்து நயன்தாராவுக்கு தனியார் ஜெட் விமானத்தை ஏற்பாடு செய்தார்களாம். அப்படத்தின் பணியாற்றிய தயாரிப்பு நிர்வாகி மூலம் இந்த தகவலை தான் அறிந்ததாக அந்தணன் கூறி உள்ளார். இதைக் கேட்டதும் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். இப்படியொரு நடிகையா? அவர் விமானத்தில்தான் பிறந்தாரா? என்று அந்தணன் கேள்வி எழுப்பி உள்ளார்.