‘வம்சம்' படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர்நடிகை நந்தினி. இந்த படத்தை தொடர்ந்து, 'கேடி பில்லா கில்லாடிரங்கா' , போன்ற சில தமிழ் படங்களில் நடித்தாலும் இவரால் காமெடி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை.இதனால் வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார்.
இவர் நடித்த முதல் சீரியலான 'சரவணன் மீனாட்சி'யில் மைனாஎன்கிற இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவரைமிகவும் பரிச்சியமாக்கியது. அதனைத் தொடர்ந்து பிரியமானவள்,கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனை கிளி,டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்தார்.
முதல் கணவரின் மரணத்திற்கு பிறகு சின்னத்திரையை விட்டுசிறிது காலம் விலகி இருந்த மைனா நந்தினி, மீண்டும் நடிக்கவந்தார். சக நடிகரான யோகேஸ்வரனுடன் காதல் மலர அவரைகடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
கடந்த ஆண்டு மைனா நந்தினி - யோகேஸ்வரன் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.தங்களது செல்ல மகனுக்கு துருவன் என பெயரிட்டுள்ளனர்.
குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே மைனா நந்தினி மீண்டும் சீரியல்கள், டி.வி. நிகழ்ச்சிகள் என பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் இந்த காதல் தம்பதி தற்போது வித்தியாசமான கெட்டப்புக்களில் நடத்தியுள்ள கப்பிள் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.
இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ மதத்தின் திருமண உடைகளை அணிந்த படி மைனா நந்தினி - யோகேஸ்வரன் இருவரும் புன்னகை பொங்க, பொங்க போஸ் கொடுத்துள்ளனர்.
அதிலும் கிறிஸ்துவ திருமண உடையில் வயதான தாத்தா, பாட்டி கெட்டப்பில் மைனா நந்தினி - யோகேஸ்வரன் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
வயதான தோற்றத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
இப்படி யாருமே யோசிக்க முடியாத அளவிற்கு விதவிதமான கெட்டப்புகளில் மைனா நந்தினி - யோகேஸ்வரன் தம்பதி போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளது லைக்குகளை குவிந்துள்ளது.