Mookuthi Amman 2 vs Scene Box Office : தீபாவளி ஸ்பெஷலாக திரைக்கு வந்த சீன் மற்றும் மூக்குத்தி அம்மன் 2 ஆகிய திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் சூர்யா மற்றும் நயன்தாரா இருவரும் கஜினி, ஆதவன், மாஸ் போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் தீபாவளிக்கு ஒரு கனெக்ஷன் இருக்கிறது. இவர்கள் இருவரது படங்களும் இரண்டு முறை தீபாவளிக்கு போட்டி போட்டு ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அதில் ஒருமுறை இருவரும் தீபாவளியை ஒட்டி ஓடிடியில் தங்கள் படங்களை நேரடியாக ரிலீஸ் செய்தனர். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு போடப்பட்டு இருந்ததால் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ஆகிய இரு படங்களும் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஹிட் அடித்தன.
இதையடுத்து சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரது படங்களும் இந்த ஆண்டு தியேட்டரில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்துள்ளது. இம்முறை சூர்யா சீன் திரைப்படத்தின் மூலம் களமிறங்கி இருக்கிறார். ஆனால் நயன்தாரா, கடந்த முறையைப் போல இம்முறையும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் போட்டிக்கு வந்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் கடந்த அக்டோபர் 6-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இதில் சீன் படத்தை ஜித்து மாதவனும், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை சுந்தர் சி-யும் இயக்கி உள்ளனர்.
சீன் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே பாசிடிவ் விமர்சனங்களை பெற்றதால், அப்படத்தின் வசூலும் ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. சீன் திரைப்படம் ரிலீஸ் ஆகி 5 நாட்கள் ஆகும் நிலையில், தற்போது வரை ரூ.174.40 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. இப்படம் நேற்று மட்டும் உலகளவில் ரூ.18.85 கோடி வசூலித்திருக்கிறது. இதில் இந்தியாவில் 12.85 கோடியும், ஓவர்சீஸில் ரூ.6 கோடியும் வசூலித்துள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 10.35 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் இதுவரை இந்தியாவில் 113.15 கோடி, வெளிநாடுகளில் 61.25 கோடி என ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ.174.40 கோவி வசூலித்துள்ளது.
மறுபுறம் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது. இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன் இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்கள் இதன் ப்ரீமியர் ஷோ பார்த்துவிட்ட ஆஹா ஓஹோ என பில்டப் விட்டனர். ஆனால் முதல் நாள் படம் பார்த்த ரசிகர்கள் படத்தை கடுமையாக விமர்சித்தனர். இதனால் கலவையான விமர்சனங்களை பெற்ற மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் தடுமாறி வருகிறது. 100 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 5 நாட்களில் இந்தியாவில் வெறும் ரூ.18.72 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. நேற்றைய நிலவரப்படி இப்படம் ரூ.2.10 கோடி வசூல் செய்திருக்கிறது. இதில் தமிழ் வெர்ஷன் மட்டுமே 1.93 கோடி வசூலித்துள்ளது. போகிற போக்கை பார்த்தால் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வசூலில் 50 கோடியை நெருங்குவதே சவாலாக இருக்கும் என யூகிக்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.