Ramayana Surpass Jailer 2 in Box Office : நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் ராமாயணா திரைப்படம் ரஜினியின் ஜெயிலர் 2 சாதனையை முறியடித்துள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'ராமாயணா: பார்ட் 1' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நாளுக்கு நாள் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட பட்ஜெட் படத்திற்கு ரசிகர்களிடம் அபாரமான வரவேற்பு கிடைத்து வருகிறது. வெளியான ஒரே வாரத்தில் இந்திய சினிமாவில் பல சாதனைகளை இது முறியடித்துள்ளது. சுமார் 4,000 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் 2026ம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்தியப் படங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
ராவணன் கதாபாத்திரத்தில் யாஷும், ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும் நடித்துள்ள 'ராமாயணா' பாக்ஸ் ஆபிஸில் தன் தாக்கத்தை மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதல் ஆறு நாட்களிலேயே 823.50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ள இந்த படம், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. நெல்சன் இயக்கிய ஜெயிலர் 2 திரைப்படம் தற்போது வரை 829 கோடி வசூலித்திருக்கிறது. ராமாயணா படம் இதுவரை 823 கோடி வசூலித்திருந்தாலும் அப்படத்தின் 7ம் நாளுக்கான முன்பதிவு மட்டும் ரூ.16 கோடிக்கும் மேல் உள்ளது. அதன்படி பார்த்தால் ராமாயணா திரைப்படம் 839 கோடி வசூலித்து ஜெயிலர் 2-வை ஓவர்டேக் செய்துள்ளது.
ராமாயணா திரைப்படம் நேற்று செவ்வாய்கிழமை மட்டும் உலகளவில் ரூ.94.10 கோடி வசூலித்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக அப்படத்தின் இந்தி வெர்ஷன் ரூ.76 கோடியும், கன்னட பதிப்பு ரூ.7.75 கோடியும், தெலுங்கில் ரூ.4 கோடியும், தமிழ் பதிப்பு ரூ.3.60 கோடியும், மலையாளத்தில் ரூ.2.75 கோடியும் வசூலித்துள்ளன. இதன்மூலம் இந்தியாவில் மட்டும் ராமாயணா திரைப்படம் ரூ.526.50 கோடி வசூல் செய்துள்ளது. இதுதவிர வெளிநாடுகளில் 297 கோடி வசூலித்துள்ள இப்படம் ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ.823.50 கோடி வசூல் செய்து மாஸ் காட்டி உள்ளது.
தீபாவளி விடுமுறை முடிந்தாலும் ராமாயணா படத்துக்கான மவுசு குறையவில்லை. வார நாட்களிலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்து வருகிறது. இப்படத்தின் மிகப்பெரிய பலமாக அதன் பிரம்மாண்டமான மேக்கிங் பார்க்கப்படுகிறது. இதற்கு முன் வெளிவந்த ஆதிபுருஷ் போன்ற ராமாயணா படங்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் நிதேஷ் திவாரி திரைக்கதையை கையாண்ட விதம் வெகுவாக பாராட்டப்படுகிறது. இப்படத்தின் ஷோ ஸ்டீலராக இருந்தது ராவணனாக நடித்துள்ள யாஷ் தான். அவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. டாக்ஸிக் தோல்விக்கு பின் தரமான கம்பேக் கொடுத்திருக்கிறார் யாஷ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.