Monisha Blessy acted with Rajinikanth in Coolie Movie : பொதுவாக சினிமா சின்னத்திரையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது. ஏற்கனவே சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் ஆகியோர் சின்னத்திரையிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இப்போது அடுத்தடுத்த லெவலுக்கு முன்னேறியுள்ளனர். சிவகார்த்திகேயன் அமரன் ஹிட் படத்திற்கு பிறகு பராசக்தி மற்றும் மதராஸி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
Rajinikanth, Monisha Blessy, Sivakarthikeyan, Thalapathy Vijay
இந்த வரிசையில் அடுத்ததாக இடம் பெற்றிருக்கும் சின்னத்திரை பிரபலம் மோனிஷா பிளெஸி. அவர் வேறுமில்லை குக் வித் கோமாளி சீசன் 4 மற்றும் டாப் குக் டூப் குக் (டாப் குக்கு டூப் குக்கு) சமையல் நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் மோனிஷா தான். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்தப் படம் அவரது கதாபாத்திரத்தை பெரிதாக எடுத்துக் காட்டவில்லை.
Jananayagan, Cinema, Coolie Movie
சிவகார்த்திகேயன் படத்திற்கு பிறகு இப்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ரூ.2 லட்சம் வரையில் சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் எப்படி வந்தார் என்பது குறித்து பார்க்கலாம்… தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு நிலவி வருகிறது. எந்த சேனலை எடுத்தாலும் சமையல் நிகழ்ச்சி தான்.
Cinema News Tamil, Asianet News Tamil
அதற்கு முக்கிய காரணமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோ தான். ஒரு சமையல் நிகழ்ச்சியை எப்படி காமெடியாகவும், எதார்த்தமாகவும் கொடுக்க முடியும் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப நட்சத்திரங்களை தேர்வு செய்து மக்களுக்கு ஒரு காமெடி கலவையாக கொடுத்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சீசனை தொடங்கிய குக் வித் கோமாளி தற்போது 5 சீசன்கள் வரையில் வந்து நிற்கிறது.
Monisha Blessy, Tamil Cinema
இந்த நிகழ்ச்சியின் மூலமாக பல கதாபாத்திரங்கள் சினிமாவில் தோன்றி வருகின்றனர். அவர்களில் ராமர், புகழ், தங்கதுரை, பாலா, அம்மு அபிராமி என்று சொல்லிக் கொண்டே போகலாம். சமீபத்தில் முடிந்த குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் புதிய நடுவராக களம் கண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செஃப் தாமு ஆகியோரது காம்போ பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும், கோமாளிகளை வைத்து இந்த நிகழ்ச்சி எப்படியோ 5ஆவது சீசனை முடித்துவிட்டது.
Cooku With Comali Fame Monisha
ஆனால், சன் தொலைக்காட்சியில் முதல் சீசனை பிரம்மாண்டமாக தொடங்கிய டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியானது பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தது. இதற்கு ஒரே ஒரு காரணம் செஃப் வெங்கடேஷ் பட். அதன் பிறகு டூப் குக். எல்லோரும் சினிமாவில் கால் பதிக்கும் போது ஏன் வெங்கடேஷ் பட் மட்டும் சினிமாவிற்கு வரவில்லை என்பது தெரியவில்லை என்றாலும் அவர் மூலமாக இந்நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தது. மேலும், இந்த நிகழ்ச்சி ஒரு டூப் குக்காக இணைந்தவர் தான் மோனிஷா. அவரது திறமை இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளி உலகத்திற்கு தெரியவர அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். சார்லி சாப்ளின் கேரக்டராக இருந்தாலும் சரி, தெய்வ திருமகள் விகரம் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ரசிகர்களை வியக்க வைப்பதோடு சிந்தக்க வைப்பதிலும் தன்னை மிஞ்ச எவரும் இல்லை என்பதை அடிக்கடி நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
Monisha Blessy in Rajinikanth Coolie Movie
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது 69 ஆவது படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் கொடுத்த மாஸ் அப்டேட்டுக்கு பிறகு இப்போது தலைவர் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்திலும் நடித்து வருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். கூலி படத்தில் ரஜினி மட்டுமின்றி சத்யராஜ், உபேந்திரா, ரேபே மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர், நாகர்ஜூனா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து பூஜா ஹெக்டே மற்றும் அமீர் கான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகின்றனர். கூலி படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழல் 2 என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.