Lokesh Kanagaraj Net worth: இயக்குனது 5 படம் தான்; ஆனால் பல கோடிக்கு அதிபதியா மாறிய லோகேஷ் கனகராஜ்!

Published : Mar 14, 2025, 03:02 PM IST

மாஸ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது சொத்து மதிப்பு எத்தனை கோடி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  

PREV
15
Lokesh Kanagaraj Net worth: இயக்குனது 5 படம் தான்; ஆனால் பல கோடிக்கு அதிபதியா மாறிய லோகேஷ் கனகராஜ்!

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். 2016 ஆம் ஆண்டு 'அவியல்' என்ற ஆந்தாலஜி குறும்படம் மூலமாக வாழ்க்கையை தொடங்கினார். இந்த குறும்படம் கொடுத்த வரவேற்பு தான் அவரை ஒரு இயக்குநராக அறிமுகம் செய்ய தூண்டியது. அப்படி அவர் இயக்குநராக அறிமுகமான முதல் படம் மாநகரம். 2017 ஆம் ஆண்டு த்ரில்லர் கதையை மையப்படுத்திய படமாக மாநகரம் வெளியானது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா கஸாண்ட்ரா, முனீஷ்காந்த், சார்லி, ஸ்ரீ என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.

25
கைதியின் தாறுமாறு வெற்றி

இந்தப் படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான 'கைதி' படத்தை இயக்கினார். முழுக்க முழுக்க நைட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், பாடல் - ஹீரோயின் என எந்த ஒரு கமர்ஷியல் விஷயங்களும் இல்லாமல்... முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. 

யார் இந்த பிளெடி ஸ்வீட் பாய்? இரண்டே படத்தில் 1000 கோடி வசூல் அள்ளிய ஜீரோ பிளாப் டைரக்டரா இது?

35
கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தார்

இந்தக் கதை கொடுத்த வரவேற்புக்கு பிறகு அடுத்தடுத்த லெவலுக்கு சென்றார் லோகேஷ் கனகராஜ். அப்படித்தான் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கினார். விஜய்க்கு பிறகு விஜய் சேதுபதி மற்றும் கமல் ஹாசன் நடித்த விக்ரம் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். பிறகு மீண்டும் விஜய்யின் லியோ படத்தை இயக்கிய நிலையில், இவர் நடித்த படங்கள் அனைத்துமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

45
ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார்

தற்போது  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தை இயக்கி வருகிறார். ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரெபே மோனிகா ஜான், மோனிஷா பிளெசி, ஜூனியர் எம்ஜிஆர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். மேலும், பூஜா ஹெக்டே மற்றும் ஆமீர் கான் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 

லோகேஷ் கனகராஜ் படத்துக்கே இந்த நிலைமையா? பணமின்றி பாதியில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங்!

55
லோகேஷ் கனகராஜ் சொத்து மதிப்பு

இந்தப் படம் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படி குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களை வைத்து படம் இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு படத்திற்கும் ரூ.50 கோடி வரையில் சம்பளம் பெற்று வருகிறாராம். இந்த நிலையில் தான் அவருடைய சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவரது சொத்து மதிப்பு ரூ.100 கோடி முதல் 125 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. சென்னையில் சொந்த வீடு வைத்துள்ள லோகேஷ் கனகராஜ் Lexus மற்றும் BMW உள்பட ஒரு சில ஆடம்பர சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories