Kingston Movie Box Office : கிங்ஸ்டன் திரைப்படம் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்தது. கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். படத்தின் பட்ஜெட் 20 கோடி ரூபாய். திரைக்கதையையும் கமல் பிரகாஷ் எழுதியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமாருடன் திவ்யபாரதி, சேத்தன், நிதின் சத்யா, அழகம் பெருமாள், இளங்கோ குமாரவேல், சாபூமோன், ஷா ரா, ஆண்டனி, அருணாசலேஸ்வரன், ராஜேஷ் பாலச்சந்திரன், ராம் நிஷாந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
24
Kingston Movie
ஜிவி பிரகாஷ் குமாரின் 25வது படமாக கிங்ஸ்டன் வெளிவந்ததால், இப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமின்றி இப்படம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டிருந்ததால், இது டெக்னிக்கல் ரீதியாகவும் பேசும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் திரைக்கதை சொதப்பியதால் கிங்ஸ்டன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியை சந்தித்துள்ளது.
கிங்ஸ்டன் திரைப்படம் வெளியான முதல் நாளில் 90 லட்சம் ரூபாய் வசூலித்தது. ஆனால் அதன் பின்னர் பெரியளவில் சோபிக்காததால் இப்படம் வெறும் ரூ.4.58 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதன் பட்ஜெட் மட்டுமே ரூ.20 கோடி ஆகும். அதில் பாதிகூட இப்படம் வசூலிக்கவில்லை. இந்த வாரம் 10 படங்கள் தியேட்டரில் புதிதாக ரிலீஸ் ஆகி உள்ளதால், கிங்ஸ்டன் படத்தை பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தூக்கிவிட்டனர். இதனால் இப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக மாறி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
44
GV Prakash
அடுத்ததாக ஜி.வி. பிரகாஷ் குமாரின் 'இடிமுழக்கம்' படமும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். படத்தின் கதை குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். கிராமப்புற பின்னணியில் உருவாகும் இந்த படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.