Perusu Movie Review : "பெருசு" திரைப்படத்தை இளங்கோ ராம் இயக்கி உள்ளார். இப்படத்தில் வைபவ் ரெட்டி மற்றும் சுனில் ரெட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் "டென்டிகோ" என்ற சிங்கள மொழி திரைப்படத்தின் ரீமேக் ஆகும், ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில பட்டி டிங்கரிங் வேலையை பார்த்துள்ளார்கள். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஒரு துக்கமான சூழலை நகைச்சுவையாக மாற்றி பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயன்றதா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
24
Perusu Movie
2 சகோதரர்களான வைபவ் மற்றும் சுனில், தங்கள் தந்தையின் மரணத்திற்கு பிறகு அவரது இறுதிச் சடங்கை நடத்த முயல்கிறார்கள். ஆனால், அதில் ஒரு எதிர்பாராத சிக்கல் வருகிறது. அவர்களது தந்தையின் உடலில் ஏற்படும் ஒரு விசித்திரமான நிலை, அவர்களை குழப்பத்திலும், நகைச்சுவை சம்பவங்களிலும் தள்ளுகிறது. இதனால், தந்தையின் நிலை வெளியில் தெரியாமல் அவரின் இறுதிச்சடங்கை நடத்தினார்களா? இல்லையா என்பதே படத்தின் கதை.
வைபவ் ரெட்டி மற்றும் சுனில் ரெட்டி ஆகியோரின் நகைச்சுவை கலந்த நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலம். இவர்களுடன் சந்தினி தமிழரசன், நிஹாரிகா NM, முனீஷ்காந்த் போன்றவர்களும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். வைபவ் மற்றும் சுனிலின் சகோதர உறவு மற்றும் அவர்களது காமெடி டைமிங்கும் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. சத்திய திலகத்தின் ஒளிப்பதிவு, கதையின் நகைச்சுவை மற்றும் உணர்வு தருணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. படத்தொகுப்பு சூரிய குமரகுருவால் சிறப்பாக கையாளப்பட்டு, கதையை சீராக முன்னெடுத்து சென்றிருக்கிறது.
44
Perusu Movie Positives and Negatives
பலம்:
- நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரு அசாதாரண சூழலை சுவாரஸ்யமாக சித்தரித்திருப்பது.
- வைபவ் மற்றும் சுனிலின் கெமிஸ்ட்ரி.
- குடும்ப பார்வையாளர்களையும் கவரும் வகையிலான காட்சிகள்.
பலவீனம்:
- ஒரு ரீமேக் ஆக இருப்பதால், சில இடங்களில் அசல் படத்தின் தாக்கம் அதிகமாக தெரிகிறது.
- நகைச்சுவை அனைவருக்கும் புரியும் வகையில் இருக்குமா என்பது சந்தேகம்.