அமீர்கானின் புது காதலிக்கு 6 வயதில் குழந்தை இருக்கு; யார் இந்த கெளரி ஸ்ப்ராட்? வயது வித்தியாசம் என்ன?

Published : Mar 14, 2025, 01:01 PM IST

பாலிவுட் நடிகர் அமீர்கான் ஏற்கனவே 2 முறை விவாகரத்து பெற்ற நிலையில், தன்னுடைய 60வது பிறந்தநாளன்று புது காதலியை அறிமுகப்படுத்தி உள்ளார்.

PREV
14
அமீர்கானின் புது காதலிக்கு 6 வயதில் குழந்தை இருக்கு; யார் இந்த கெளரி ஸ்ப்ராட்? வயது வித்தியாசம் என்ன?

Age Difference Between Aamir Khan and Gauri Spratt : பாலிவுட்டில் மிஸ்டர் பெர்ஃபெக்‌ஷனிஸ்ட் என பெயர் எடுத்தவர் அமீர்கான். இவருக்கு தற்போது 60 வயது ஆகிறது. 1965ம் ஆண்டு மும்பையில் பிறந்த அமீர்கான் தன்னுடைய 60வது பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடி இருக்கிறார். வியாழக்கிழமை மீடியா மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் அமீர்கான். அந்த பிறந்த நாள் விழாவின் போது அமீர்கான் ஒரு விஷயத்தை சொன்னபோது எல்லாரும் ஷாக் ஆகிட்டாங்க. 

24
Aamir Khan New Girlfriend

ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்ற அமீர்கான், தன்னுடைய புது காதலியை அறிமுகப்படுத்தி உள்ளார். அவரின் புது காதலியின் பெயர் கௌரி ஸ்ப்ராட் (Gauri Spratt). தன் காதலியை அறிமுகம் செய்த கையோடு தன்னுடைய 3வது கல்யாணம் பற்றியும் பேசி இருக்கிறார். அமீர்கான் கடந்த 18 மாசமா கௌரி ஸ்ப்ராட்டை காதலித்து வருகிறாராம். கௌரி பெங்களூருவை சேர்ந்தவர். அவர் ஒரு சலூன் நடத்தி வருகிறார். 

இதையும் படியுங்கள்... 20 வருஷமா சினிமாவில் சம்பளமே வாங்காமல் நடிக்கும் அமீர் கான் - காரணம் என்ன?

34
who is Gauri spratt

அவரின் லிங்க்ட்இன் ப்ரொஃபைல் படி, கௌரி ப்ளூ மவுண்டன் ஸ்கூல்ல படிச்சாங்க. 2004ம் ஆண்டு லண்டனில்  இருக்கும் யுனிவர்சிட்டி ஆஃப் ஆர்ட்ஸ்ல FDA ஸ்டைலிங் அண்ட் போட்டோகிராபி ஃபேஷன் கோர்ஸ் பண்ணிருக்காங்க. தற்போது  மும்பைல BBluntனு ஒரு சலூன் நடத்தி வருகிறாராம். வியாழக்கிழமை மீடியா கிட்ட பேசும்போது, அவர் தான் அமீர்கானுடைய தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறினார். கெளரிக்கு ஆறு வயசுல ஒரு பையன் இருக்கானாம். அமீர்கானை 25 வருஷமா தெரியும்னு சொன்ன கெளரி, கடந்த 18 மாசமா காதலித்து வருவதாக தெரிவித்தார்,

44
Aamir Khan about 3rd marriage

அமீர்கான் ஏற்கனவே ரீனா தத்தா, கிரண் ராவ் என இருவரை திருமணம் செய்துகொண்டு, அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவர்களை டைவர்ஸ் செய்து பிரிந்துவிட்டார். 2 கல்யாணத்தின் மூலம் அமீர்கானுக்கு மூணு குழந்தைகள் இருக்காங்க. தன்னுடைய மகன் மற்றும் மகளுக்கும் கௌரிய பிடிச்சிருப்பதாக அமீர்கான் கூறினார். அதனால் கௌரி கூட எப்போ கல்யாணம் என கேட்டதற்கு சிரிச்சுக்கிட்டே பதிலளித்த அமீர்கான், "நாங்க கமிட்டடா இருக்கோம். எனக்கு ரெண்டு தடவ கல்யாணம் ஆயிருச்சு. 60 வயசுல கல்யாணம் எனக்கு நல்லா இருக்காது. பாக்கலாம்"னு சொல்லி இருக்கிறார். கெளரிக்கு தற்போது 46 வயது ஆகிறதாம். இவர் அமீர்கானை விட 14 வயது இளையவர் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 60 வயதில் 3வது திருமணமா? அமீர்கானின் காதல் வலையில் சிக்கியது யார் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories