தீவிர விஜய் ரசிகன்; ரூ.1400 சம்பளத்திற்கு சினிமாவில் நடித்த வருண் சக்கரவர்த்தி - அடடே இந்த படமா?

Published : Mar 14, 2025, 12:07 PM ISTUpdated : Mar 14, 2025, 12:15 PM IST

இந்திய கிரிக்கெட் அணியில் சுழல் மன்னனாக கலக்கி வரும் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சினிமாவிலும் நடித்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
தீவிர விஜய் ரசிகன்; ரூ.1400 சம்பளத்திற்கு சினிமாவில் நடித்த வருண் சக்கரவர்த்தி - அடடே இந்த படமா?

Varun chakravarthy acted in Tamil Movie : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. கடைசியாக 2013-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி இந்த சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்த நிலையில், தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அந்த கோப்பையை சுமார் 12 வருடத்திற்கு பின் கைப்பற்றி சாதனை படைத்தது. இந்திய அணி சாம்பியன் ஆனதற்கு பின்னணியில் ஒரு தமிழர் இருக்கிறார். அவர் தான் வருண் சக்கரவர்த்தி. இவர் தன் மாயாஜால சுழலால் எதிரணியினரை திணறடித்து இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றி இருந்தார். அடுத்ததாக ஐபிஎல் போட்டிக்காக தயாராகி வருகிறார் வருண். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

24
varun chakravarthy in Jeeva Movie

வருண் சக்கரவர்த்தியை ஒரு கிரிக்கெட்டராக அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு நடிகர் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வருண் சக்கரவர்த்தி கடந்த 2014-ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஜீவா படத்தில் நடித்திருந்தார். இது கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால் இதிலும் கிரிக்கெட் வீரராகவே நடித்திருந்தார் வருண். இப்படத்தில் நடிக்க வருண் சக்கரவர்த்திக்கு ஒரு நாளைக்கு ரூ.1400 சம்பளமாக வழங்கப்பட்டதாம்.

இதையும் படியுங்கள்... 2 ஆண்டு காதல்! திருமணத்துக்கு தடையாக இருந்த கொரோனா! இது வருண் சக்கரவர்த்தியின் லவ் ஸ்டோரி!

34
Varun Chakravarthy Vijay Tattoo

வருண் நடித்த ஒரே ஒரு படம் ஜீவா மட்டும் தான். கிரிக்கெட்டை போல் சினிமாவின் மீதும் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்து வருகிறார் வருண். இவர் மிகத் தீவிரமான தளபதி விஜய் ரசிகராம். எந்த அளவுக்கு தீவிரமான ரசிகர் என்றால்... விஜய் மீதுள்ள அன்பால் அவரின் தலைவா பட போஸ்டரில் உள்ள போட்டோவை தன் உடலில் பச்சைக் குத்தி இருக்கிறார் வருண் சக்கரவர்த்தி. இதை அறிந்த விஜய் கடந்த 2020-ம் ஆண்டு அவரை நேரில் அழைத்து கிரிக்கெட்டில் மேலும் ஜொலிக்க பாராட்டினார். அதுமட்டுமின்றி விஜய்யுடன் மாஸ்டர் பட பாணியில் போஸ் கொடுத்து புகைப்படமும் வெளியிட்டார் வருண் சக்கரவர்த்தி.

44
Varun Chakravarthy with Vijay

வருண் சக்கரவர்த்தி விஜய் டிவி ஷோவிலும் சிறப்பு விருந்தினராக பங்கெடுத்து இருக்கிறார். இவர் விஜய் டிவியின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் போது கடந்த 2023-ம் ஆண்டு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவருடன் மற்றொரு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரரான வெங்கடேஷ் ஐயரும் வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தான் குக் வித் கோமாளி ஷோவின் மிகப்பெரிய ரசிகன் என கூறினார் வருண்.

இதையும் படியுங்கள்... 4 போல்டு, ஒரு கேட்ச் – சரித்திரம் படைத்த வருண் சக்கரவர்த்தி – முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை!

click me!

Recommended Stories