அட்லீ கேட்ட டூமச் பட்ஜெட்; ஆளவிடுங்கடா சாமினு தலைதெறிக்க ஓடிய சன் பிக்சர்ஸ்?
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் பட்ஜெட்டை கேட்டு தயாரிப்பாளர்கள் தெறித்தோடுகிறார்களாம்.
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் பட்ஜெட்டை கேட்டு தயாரிப்பாளர்கள் தெறித்தோடுகிறார்களாம்.
Atlee - Allu Arjun Movie : அல்லு அர்ஜுன் (Allu Arjun) – அட்லீ (Atlee) இணையும் திரைப்படம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்துள்ளன. புஷ்பா 2 வெற்றிக்கு பின் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் இது என்பதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் மீடியாவில் கடந்த சில நாட்களாக இந்த படம் குறித்து பலவிதமான செய்திகள் பரவி வருகின்றன. அது வேறு எதுவும் இல்லை தயாரிப்பாளர் இந்த படத்தை செய்ய முடியாது என்று கைவிரித்து விட்டதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
அட்லீ தனது அடுத்த படத்தை சன் பிக்சர்ஸுக்கு செய்வதாக ஜவான் ரிலீஸுக்கு முன்பே கையெழுத்திட்டு முன்பணம் பெற்றார். ஆனால் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது அப்படத்தில் இருந்து ஜகா வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இயக்குனர் அட்லீ கேட்கும் பட்ஜெட்டுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் நோ சொல்லி உள்ளதாம். முதலில் சல்மான் கானுடன் படம் செய்யலாம் என்று நினைத்து, கடைசியில் அல்லு அர்ஜுனிடம் வந்து நின்றார் அட்லீ. ஆனால் பட்ஜெட் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாததால் படத்தில் இருந்து சன் பிக்சர்ஸ் வெளியேறிவிட்டதாம்.
இதையும் படியுங்கள்... அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் 5 ஹீரோயின்களா? யார்... யார் தெரியுமா?
இதையடுத்து தயாரிப்பாளர் தேர்வு செய்யும் பொறுப்பை தான் பார்த்துக் கொள்வதாக கூறிய அல்லு அர்ஜுன், கேம் சேஞ்சர் படத்தால் கடும் நஷ்டத்தில் இருக்கும் தில் ராஜுவிடம் பேசினாராம். ஏற்கனவே கேம் சேஞ்சர் படத்தால் பலத்த அடி வாங்கியதால் மீண்டும் அதுபோல ஒரு ரிஸ்க் எடுக்க முடியாது என கூறி நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. அதோடு இப்படத்திற்காக அட்லீ ரூ.100 கோடி சம்பளம் கேட்கிறாராம். அதுவும் தில் ராஜு விலகலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அதோடு அட்லீயும் ஃபார்மில் இருக்கிறார். அல்லு அர்ஜுன் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த நிலையில் அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் படம் ஸ்டைலிஷ் ஆக்ஷன் எண்டர்டெய்னர் படமாக உருவாக உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் பட்ஜெட் கணக்குகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகின்றன. அல்லு அர்ஜுன், அட்லீ கூட்டணியில் உருவாகும் படம் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் தான் தயாரிப்பாளர்கள் தெறித்தோடுகிறார்களாம்.
இதையும் படியுங்கள்... விஜய்யின் ஜனநாயகன் படத்தில் அட்லீ, நெல்சன், லோகேஷுக்கு இப்படி ஒரு ரோலா?