
தமிழ் சினிமாவில் தன்னுடைய தந்தை, எஸ் ஏ சி மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி... பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தான் தளபதி விஜய். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் சினிமாவில் 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'கோட்' திரைப்படம் ரிலீசானது. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தளபதி விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார்.
அதாவது கடந்த 5 வருடங்களாகவே, தன்னுடைய திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் அரசியல் பேசி வந்த விஜய், அரசியலுக்கு வர ஆயத்தமாகி வருகிறார் என தகவல்கள் வெளியானது. ஆனால் அப்போதெல்லாம் சைலன்டாக இருந்த விஜய், கடந்தாண்டு தன்னுடைய அரசியல் நகர்வை அதிகார பூர்வமாக வெளிப்படுத்தினார்.
Thalapathy Vijay: விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு: எப்போது அமலுக்கு வருகிறது?
'தமிழக வெற்றிக் கழகம்' என பெயரிடப்பட்டுள்ள தன்னுடைய கட்சியை, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததோடு, மாவட்ட செயலாளர்களையும் அடுத்தடுத்து அறிவித்து வருகிறார். அதேபோல் தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவனாகவும் அவதாரம் எடுத்துள்ளார். விஜய் சமீபத்தில் கூட, பரந்தூரில் விமான நிலையம் வரக்கூடாது என விவசாய மக்களுக்கு ஆதரவாக போர் கொடி தூக்கியது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் படிப்பை ஊக்குவிக்கும் விதமாக வருடம் தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வருகிறார். தளபதி விஜயின் அரசியல் என்ட்ரி அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்து இருந்தாலும், ஒரு சிலர் தளபதி விஜய் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
'ஜனநாயகன்' படப்பிடிப்பில் தளபதி எப்படி? வில்லன் நடிகர் பாபி தியோல் ஓப்பன் டாக்!
காரணம் தளபதி விஜய், மக்கள் பணியில் முழுமையாக ஈடுபட உள்ளதால் இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடித்து வரும் 'ஜனநாயகன்' திரைப்படமே தன்னுடைய கடைசி திரைப்படம் என்பதையும் அறிவித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் பணிகளை துரிதப்படுத்தி உள்ள விஜய், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் விழுப்புரம் மாவட்டம், விக்ர வாண்டியில் தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். விஜயின் முதல் மாநாடு எப்படி இருக்கும்? என எதிர்பார்த்த பிற அரசியல் கட்சியினருக்கு கட்சியினர்... விஜயின் அரசியலை ஆதரித்து வந்த கூட்டத்தை கண்டு மிரண்டு போனார்கள். தற்போது வெளியில் விஜயை பார்த்து பயமில்லை எனக் திமுக மற்றும் அதிமுக காட்சிகள் கூறி வந்தாலும், விஜயின் அரசியல் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து.
தீவிர விஜய் ரசிகன்; ரூ.1400 சம்பளத்திற்கு சினிமாவில் நடித்த வருண் சக்கரவர்த்தி - அடடே இந்த படமா?
இந்நிலையில் தளபதி விஜய்யின் பாதுகாப்பு கருதி அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், "இன்று முதல் (மார்ச் 14-ஆம் தேதி) இவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த பாதுகாப்பு பணியில் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசவ் படையை சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். இதைத்தொடர்ந்து தளபதி விஜயின் நீலாங்கரை வீட்டில் உதவி ஆணையர் பரத் தலைமையிலான போலீசார் வருகை தந்து, முக்கிய ஆலோசனைகள் நடத்தி உள்ளனர்.
இந்த ஆலோசனையின் போது, Y பிரிவு பாதுகாப்பபு குறித்து தளபதி விஜய்க்கு விளக்கம் கொடுத்ததாகவும். தமிழக பகுதிகளில் மட்டுமே Y பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பு கொடுப்பார்களே தவிர, வெளிநாடுகளுக்கு செல்லும் போது, Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படாது போன்ற தகவல்களை எடுத்து கூறியதாவும், கூறப்படுகிறது.