
ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'கூலி படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. கோடி வசூல் குவிக்குமா என்பதுதான் தற்போது கோலிவுட்டில் உள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு. இது குறித்துப் பலவிதமான கருத்துக்கள் மற்றும் கணிப்புகள் நிலவி வருகின்றன.
கூலி ரூ.1000 கோடி வசூல் செய்ய வாய்ப்புள்ளதா?
கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, ஆமீர் கான் (சிறப்பு தோற்றம்), ஷோபின் ஷாஹீர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர ரச்சிதா ராம், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர், கண்ணா ரவி, காளி வெங்கட், மோனிஷா பிளெசி ஆகியோர் பலரும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதில், ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் இருவரும் நண்பர்கள். சத்யராஜின் மகள் தான் ஸ்ருதி ஹாசன் (பிரீத்தி ராஜசேகர்). கூலி படத்தின் டீசரை வைத்து பார்க்கும் போது சத்யராஜிற்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது. இதன் காரணமாக அவரை காப்பாற்றவோ அல்லது அவரது மகளுக்காகவோ ரஜினிகாந்த் வருகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதையாக இருக்கலாம் என்று தெரிகிறது.
முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பார்க்க ஏராளமான காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்தப் படம் ரூ.1000 கோடி வசூல் குவிக்குமா என்பது ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
மோனிகா பாடலை பார்த்த மோனிகா பெலூச்சி
இந்த நிலையில் தான் சமீபத்தில் ஒரு நேர்காணலில், நடிகை பூஜா தான் நடித்த 'கூலி' திரைப்படத்தில் வரும் 'மோனிகா' பாடலை, பிரபல ஹாலிவுட் நடிகை மோனிகா பெலூச்சி (Monica Bellucci) பார்த்ததாகக் கேள்விப்பட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து பூஜா கூறியதாவது: மொராக்கோவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் (Marrakech International Film Festival) தலைவர் மெலிடா டாஸ்கன், 'கூலி' படத்தின் 'மோனிகா' பாடலை மோனிகா பெலூச்சிக்குக் காண்பித்துள்ளார். அந்தப் பாடலை மோனிகா பெலூச்சி பார்த்து மிகவும் ரசித்ததாகத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட பூஜா, "இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. மோனிகா பெலூச்சியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது தனித்துவமான குரல் மற்றும் ஸ்டைலால் அவர் ஒரு அடையாளச் சின்னமாக (iconic) இருக்கிறார். என்னுடைய பாடல் அவருக்குப் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறினார்.
மேலும், மோனிகா பெலூச்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஏராளமான ரசிகர்கள், 'கூலி' பாடலைப் பார்க்கும்படி கமெண்ட் செய்ததையும் பூஜா நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிகா பெலூச்சி (Monica Bellucci) உலகப் புகழ்பெற்ற இத்தாலிய நடிகை மற்றும் மாடல். தனது வசீகரமான அழக மற்றும், தனித்துவமான நடிப்புத் திறன் ஆகியவற்றின் மூலம் உலக சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். கடந்த 2000ஆம் ஆண்டு திரைக்கு வந்த மலெனா படம் பெலூச்சியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் லோகேஷின் கருத்து என்ன?
'கூலி' திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்யுமா என்ற கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், "ரூ.1000 கோடி வசூல் குறித்து நான் உறுதியளிக்க முடியாது, ஆனால் டிக்கெட்டுக்கு நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நிச்சயம் மதிப்பு இருக்கும் என உறுதியளிக்க முடியும்" என்று கூறியிருக்கிறார்.
மொத்தத்தில், 'கூலி' படத்தின் பிரம்மாண்டமான நடிகர்கள், இயக்குனரின் பெயர், மற்றும் உலகளாவிய எதிர்பார்ப்பு ஆகியவை ரூ.1000 கோடி வசூல் செய்யும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. இருப்பினும், படத்தின் விமர்சனங்களும், 'வார் 2' உடனான போட்டியும் இதன் வெற்றியை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.