இப்போது, நான் என்னுடைய மருமகளை உங்களது வீட்டிற்கு அனுப்ப மாட்டேன் என்று கோமதியும் கண்டிப்புடன் சொலிவிட்டார். அதன் பிறகு கதிர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று வேடிக்கை பார்த்த மீனா, ராஜீயுடன் பேசிக் கொண்டிருக்கும் போது நீ உன்னுடைய அம்மா, அப்பா வந்து கூப்பிட்டதும் வர முடியாது என்று சொன்னதும், கதிர் ரொம்பவே சந்தோஷப்பட்டான், அவன் குஷியில் இருந்தான். இப்படி, அப்படி என்று எல்லாம் செய்தான் என்று கூறினார்.
உடனே நீ எதற்கு கோபப்படுற, உண்மையில் அவன் உன்னை போக சொன்னதுக்கு கோபப்படுகிறாயா இல்லை இருக்க சொல்லவில்லை என்று வருத்தப்படுகிறாயா என்று மீனா கேட்டார். மேலும் உன்னை தான் அவனுக்கு பிடிக்காது அல்லவா. அப்புறம் என்ன, நீ உன்னுடைய வீட்டிற்கு செல்ல வேண்டியது தானே என்றார். அதற்கு ராஜீ, இல்லை அவனை எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். நான் அவனை லவ் பண்ணுறேன் என்றார்.