சன் டிவியில் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் கதையில் விறுவிறுப்பு இல்லாததால் டல் அடித்த இந்த சீரியல், கடந்த மாதம் முதல் பிக் அப் ஆக தொடங்கியது. இதனால் கடந்த நான்கு வாரங்களாக டிஆர்பி ரேஸில் கடகடவென முன்னேறி உள்ளது. அதுமட்டுமின்றி சன் டிவியின் டாப் 4 சீரியல்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம் என்ன என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
பிக் அப் ஆன எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி
ஆதி குணசேகரனை ஈஸ்வரி எதிர்த்த எபிசோடில் இருந்து தான் எதிர்நீச்சல் 2 சீரியல் பிக் அப் ஆக தொடங்கியது. தன்னை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஈஸ்வரியை கழுத்தை நெரித்து கொல்லப்பார்த்தார் குணசேகரன். அவர் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரி பேச்சு மூச்சின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரின் இந்த நிலைக்கு ஆதி குணசேகரன் தான் காரணம் என்பதற்கான ஆதாரம் கிடைக்காமல் ஜனனி திண்டாட, மறுபுறம் ஆதாரத்தை தன் வசம் வைத்துக் கொண்டு ஆதி குணசேகரனை ஆட்டிப்படைக்க தயாராகி வருகிறார் அறிவுக்கரசி.
34
டிஆர்பியில் உச்சம் தொட்ட எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு கடந்த வாரம் ஒட்டுமொத்தமாக 9.03 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருந்தன. அந்த சீரியல் தொடங்கியதில் இருந்து அதற்கு கிடைத்த அதிகபட்ச டிஆர்பி ரேட்டிங் இதுவாகும். இதில் ஒவ்வொரு நாள் வாரியாக பார்க்கும் போது ஜூலை 26-ந் தேதி தான் அதிகபட்சமாக 9.93 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து ஜூலை 27ந் தேதி 8.59 புள்ளிகளும், ஜூலை 28-ந் தேதி 9.19 புள்ளிகளும், ஜூலை 29-ந் தேதி 8.76 புள்ளிகளும், ஜூலை 30-ந் தேதி 8.71 புள்ளிகளும், ஜூலை 31ந் தேதி 9.25 புள்ளிகளும், ஆகஸ்ட் 1ந் தேதி 8.26 புள்ளிகளும் கிடைத்துள்ளன.
எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பி எகிற காரணமாக இருந்த ஈஸ்வரி, அந்த சீரியலை விட்டு விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அவர் தற்போது சுயநினைவின்றி இருப்பதால், அவர் இறந்ததுபோல் அவரது கேரக்டர் முடிக்கப்பட உள்ளதா? அல்லது அவர் வேறு காரணங்களுக்காக விலகிவிட்டாரா? என்பது விரைவில் தெரியவரும். இனி தர்ஷனின் திருமண எபிசோடு வர உள்ளதால், டிஆர்பி அதில் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் இடையே திருமணம் நடக்குமா? அல்லது அதில் ஏதேனும் ட்விஸ்ட் வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.