சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷின் பாட்டி லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவரை பார்க்க முத்து மற்றும் மீனா ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றபோது, அவர் காணாமல் போய்விடுகிறார். அவரைப் பற்றி நர்ஸிடம் விசாரிக்கும் போது அவரை அவரது மகள் வந்து அழைத்து சென்றுவிட்டதாக கூறுகிறார். இதனால் ஷாக்கான முத்து மற்றும் மீனா, கிரிஷை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள். அங்கு என்ன ஆனது என விஜயா கேட்க, கிரிஷின் பாட்டி, மருத்துவமனையில் இருந்து எஸ்கேப் ஆன விஷயத்தை போட்டுடைக்கிறார் முத்து. இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
கிரிஷை எங்கையாவது போய் விட்டுட்டு வரச்சொல்லும் விஜயா
கிரிஷின் பாட்டி பற்றி மனோஜ், விஜயாவிடம் கேட்கும் போது, அவர் நடந்ததை கூறுகிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன மனோஜ், இதற்கு தான் முன்னபின்ன தெரியாத ஆட்களை வீட்டில் சேர்க்க கூடாது என கூறுகிறார் மனோஜ். அப்போ இனி இவன் இங்க தான் இருக்கப் போகிறானா என மனோஜ் கேட்க, அப்படியெல்லாம் நான் இருக்க விட மாட்டேன் என சொல்கிறார் விஜயா. அதேபோல் முத்து, கிரிஷின் அம்மாவை தேடப்போய் இருக்கும் தகவலையும் சொல்கிறார் விஜயா. அந்த அம்மா ஓடிப் போயிடுச்சுனா கிரிஷை எங்கையாவது போய் விட்டுட்டு வராமல், திரும்பவும் கூட்டிட்டு வந்து ஊட்டி விடுகிறாள் என மீனாவை பார்த்து சொல்கிறார் விஜயா.
34
விஜயாவை தட்டிகேட்கும் மீனா
அப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கிரிஷை பார்த்து, எப்படி திங்குது பாரு... யார் வீட்டு அரிசி, கிலோ 70 ரூபா விக்குது என மூஞ்சில் அடிச்சது போல் சொல்கிறார் விஜயா. இதனால் மனமுடைந்து போகும் கிரிஷ், சாப்பாடு வேண்டாம் என எழுந்து சென்றுவிடுகிறான். உனக்கெல்லாம் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா என அண்ணாமலையும், ஒருத்தர் சாப்பிடும்போது பாதியிலேயே நிறுத்துவது ரொம்ப பாவம் அத்தை என மீனாவும் கூறுகிறார்கள். உடனே விஜயா, ஆமா நான் பாவி தான்... நீங்கெல்லாம் புண்ணியம் பண்ணவங்க. அவன் சாப்பிடலேனா ஒன்னும் கொறஞ்சிடாது என கூறுகிறார்.
நீ கட்டுற பூவையெல்லாம் தெருவுல விக்கிறதோட நிறுத்திக்கோ, என் காதுல சுத்தாத. அவர் அம்மா, பாட்டியெல்லாம் இவனை தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. உங்களுக்கு மட்டும் அப்படி என்ன அக்கறை என கேட்கிறார் விஜயா. உடனே மனோஜ், இப்பவே அந்த பையனை வெளியில் அனுப்புவது நல்லதுனு சொல்கிறார். உடனே இந்த பையன் வீட்டில் இருக்கலாம் என சொல்பவர்கள் எல்லாம் கை தூக்குங்க என முத்து கேட்டதும் அனைவரும் கை தூக்குகிறார்கள். பின்னர் மனோஜ் இவன் இருக்க கூடாது என சொல்பவர்கள் கை தூக்குங்க என கேட்கையில் யாருமே தூக்கவில்லை. அவர் மட்டும் தூக்கி இருக்கிறார். பின்னர் ரோகிணியை கையை தூக்க சொல்கிறார். அவர் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.