தமிழ் பெண்ணுடன் காதல் திருமணம்... நடிகர் மோகன்லாலின் அடிபொலி லவ் ஸ்டோரி தெரியுமா?

Published : Aug 16, 2024, 10:05 AM IST

மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால் தமிழ்நாட்டு பெண்ணை காதலித்து கரம்பிடித்தது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

PREV
15
தமிழ் பெண்ணுடன் காதல் திருமணம்... நடிகர் மோகன்லாலின் அடிபொலி லவ் ஸ்டோரி தெரியுமா?
Mohanlal

மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டாராக கொடிகட்டிப் பறப்பவர் மோகன்லால். அவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் மோகன்லால் நடிப்பில் வெளியான சிறைச்சாலை, காப்பான், ஜில்லா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. கடைசியாக ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் மாஸான கேமியோ ரோலில் மிரட்டி இருந்தார் மோகன்லால். இவர் தமிழ் படங்களில் நடித்துள்ளது தெரியும், ஆனால் இவர் தமிழ்நாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

25
Mohanlal wife Suchithra

மோகன்லாலின் மனைவி பெயர் சுசித்ரா. இவர் தமிழில் புகழ்பெற்ற தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்த கே.பாலாஜியின் மகள் ஆவார். மோகன்லால் மனைவி சுசித்ரா, படித்தது சென்னையில் தான். அவர் எத்திராஜ் கல்லூரியில் தான் தன் கல்லூரி படிப்பை முடித்தார். மேலும் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகையாம். ரஜினியும், அவரது தந்தை பாலாஜியும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

35
Suchitra Mohanlal

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கெரியரில் மாபெரும் வெற்றிபெற்ற பில்லா படத்தை தயாரித்ததே சுசித்ராவின் தந்தை தானாம். அந்த சமயத்தில் பில்லா படத்தின் பெரும்பாலான காட்சிகளை பாலாஜியின் வீட்டில் தான் படமாக்கி இருக்கின்றனர். அப்போது ஸ்கூல் படித்துக் கொண்டிருந்த சுசித்ரா, ரஜினியை பார்ப்பதற்காகவே ஸ்கூலை பாதியில் கட் அடித்துவிட்டு வந்துவிடுவாராம். அந்த அளவும் ரஜினி மீது கிரேஸ் இருந்துள்ளது.

இதையும் படியுங்கள்... சில்க் ஸ்மிதாவின் நிழலாக இருந்த தாடிக்காரர் யார்? தென்னாட்டு பேரழகியின் தெரியாத பக்கங்கள்

45
mohanlal Family

ரஜினிக்கு அடுத்தபடியா சுசித்ராவுக்கு பிடித்த நடிகர் என்றால் அது மோகன்லால் தானாம். ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து வந்ததால் மோகன்லாலை சுசித்ராவுக்கு சுத்தமாக பிடிக்காதாம். பின்னர் ஹீரோவான பின்னர் தான் அவர் மீது ஈர்ப்பு வந்திருக்கிறது. ஒருமுறை அப்பாவின் நண்பர் வீட்டு திருமணத்திற்கு சுசித்ரா குடும்பத்தோடு சென்றிருக்கிறார். அங்கு மோகன்லால் சிறப்பு விருந்தினராக வந்திருந்தாராம்.

55
mohanlal love story

அப்போது அவருடன் போட்டோ எடுத்துக் கொண்ட சுசித்ரா, பின்னர் அவரை காதலிக்க தொடங்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் குடும்பத்தினரிடமே தன்னுடைய காதலை போட்டுடைத்துள்ளார். ஆரம்பத்தில் ஷாக் ஆன சுசித்ராவின் பெற்றோர் பின்னர் மோகன்லாலும் இவரை காதலிப்பது தெரிந்து ஓகே சொல்லிவிட்டார்களாம். தான் காதலித்த அளவு கூட சினிமாவில் மோகன்லாலை எந்த நடிகைகளும் காதலித்ததில்லை என பூரிப்புடன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் சுசித்ரா.

இதையும் படியுங்கள்... ரம்பாவுக்கு கவுண்டமணி வீடு பரிசாக கொடுத்தாரா? - பரபரப்பு தகவல்!

Read more Photos on
click me!

Recommended Stories