ரம்பாவுக்கு பரிசாக கொடுத்த வீடு – கோடிக்கு ஆசைப்பட்டு திரும்ப கேட்கும் கவுண்டமணி குடும்பம்!

Published : Aug 16, 2024, 09:10 AM ISTUpdated : Aug 16, 2024, 03:00 PM IST

நடிகை ரம்பாவிற்கு நடிகர் கவுண்டமணி வீடு பரிசாக கொடுத்ததாகவும், பின்னர் அந்த வீட்டை அவரது குடும்பத்தினர் திரும்ப கேட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருவரும் வீட்டை மீட கோர்ட் படி ஏற இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், உண்மையிலேயே என்ன நடந்தது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

PREV
16
ரம்பாவுக்கு பரிசாக கொடுத்த வீடு – கோடிக்கு ஆசைப்பட்டு திரும்ப கேட்கும் கவுண்டமணி குடும்பம்!
Goundamanis family Filed case against Rambha

கார்த்தி, கவுண்டமனி நடிப்பில் திரைக்கு வந்த உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவரது உண்மையான பெயர் விஜயலட்சுமி யீதி. சினிமாவிற்கு வந்ததைத் தொடர்ந்து ரம்பா என்று மாற்றிக் கொண்டார். சினிமாவில் உச்சத்தில் இருந்த போது கவுண்டமனி பரிசாக கொடுத்த வீட்டை அவரது குடும்பத்தினர் திரும்ப கேட்டு இருக்கின்றனர். இதனால், ரம்பா மற்றும் கவுண்டமனி குடும்பத்தினருக்கும் இடையில் கடும் யுத்தம் ஏற்பட்டுள்ளது.

26
Rambha Goundamani House Issues

இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் பணம் செலவு செய்து எப்படியாவது வீட்டை மீட்க வேண்டும் என்று கோர்ட் படி ஏற இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அவர்கள் கோர்ட்டுக்கு சென்று வீட்டை மீட்டார்களா இல்லையா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

36
Actor Goundamanis Rambha Issues

ரம்பா மற்றும் கவுண்டமனி இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். உள்ளத்தை அள்ளித்தா படத்தைத் தொடர்ந்து செங்கோட்டை, சுந்தர புருஷன், தர்ம சக்கரம், அருணாச்சலம், ராசி, விஐபி, என்றென்றும் காதல், மின்சாரக் கண்ணா, ஆனந்தம், உனக்காக எல்லாம் உனக்காக என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

46
Goundamanis family gifted house to Rambh

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, போஜ்புரி, பெங்காலி என்று பல படங்களில் நடித்துள்ளார். உச்சத்திலிருந்த போதே திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார். அதன் பிறகு குடும்பம், குழந்தைகள் என்று இருந்த ரம்பா தற்போது மீண்டும் கேமரா முன்பு வந்து கொண்டிருக்கிறார் வருகிறார்.

56
Goundamani gifted house to Rambha

இது ஒரு புறம் இருக்க, கவுண்டமனி அன்பு பரிசாக 90ஸ் காலகட்டத்தில் வீடு ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். அப்போது அந்த வீட்டின் விலை ரொம்ப குறைவு. ஆனால், இன்று கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கு பிறகு அந்த வீட்டின் விலை பல கோடி ரூபாய் ஆகும். இதன் காரணமாகத் தான் கவுண்டமனியின் குடும்பத்தினர் எப்படியாவது அந்த வீட்டை வாங்கிவிட வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்திருக்கின்றனர். ரம்பாவும் வீட்டை கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

66
Goundamani and Rambha House Issue

உச்சநட்சத்திரமாக ஜொலித்த ரம்பா சினிமாவிற்கு மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோதிகா, சிம்ரன், கௌதமி என்று பலரும் சினிமாவிற்கு மீண்டும் வந்த நிலையில் ரம்பாவும் திரும்ப வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories