விக்ரம் போட்ட உழைப்புக்கு இந்த வசூல் எல்லாம் ரொம்ப கம்மி... தங்கலான் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

Published : Aug 16, 2024, 07:51 AM IST

பா.இரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

PREV
14
விக்ரம் போட்ட உழைப்புக்கு இந்த வசூல் எல்லாம் ரொம்ப கம்மி... தங்கலான் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Vikram, Pa Ranjith

அட்டக்கத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தவர் பா.இரஞ்சித். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் முதன் முறையாக நடித்த திரைப்படம் தங்கலான். இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளார் ஞானவேல் ராஜா. தங்கலான் திரைப்படம் கேஜிஎப் எனப்படும் கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது.

24
Chiyaan Vikram

தங்கலான் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மலையாள நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு இசை அசுரன் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். தங்கலான் திரைப்படம் நேற்று சுதந்திர தின ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. உலகமெங்கும் சுமார் 2 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்... 'தங்கலான்' படத்தை இந்த 5 காரணங்களுக்காக கண்டிப்பாக பார்க்கவேண்டும்!

34
Thangalaan Vikram

நடிகர் விக்ரமின் நடிப்பு பலரையும் ஆச்சர்யத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு குறைந்தபட்சம் தேசிய விருதாவது கொடுக்கனும் இல்லேனா போராட்டம் பண்ணுவோம் என ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு விக்ரம் உயிரைக் கொடுத்து நடித்திருப்பதாக ரசிகர்கள் கூறினர். அவர் இந்த அழைவுக்கு உழைப்பை கொட்டி நடித்துள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியதா? அதன் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? போன்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

44
Thangalaan Day 1 Box Office

அதன்படி தங்கலான் திரைப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.12.60 கோடி வசூலித்துள்ளதாம். தமிழ்நாட்டில் மட்டும் ரூ.11 கோடி வசூலித்துள்ளதாம் இப்படம். இதைப்பார்த்த ரசிகர்கள் விக்ரம் போட்ட உழைப்புக்கு இந்த வசூல் எல்லாம் பத்தாது, ரொம்ப கம்மி என கூறி வருகின்றனர். இனி அடுத்தடுத்து இரு தினங்கள் விடுமுறை தினங்களாக வருவதால், தங்கலான் படத்தின் வசூல் மேலும் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சியான் விக்ரம் தேசிய விருது வாங்கினாரா? எந்த படத்திற்கு தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories