சியான் விக்ரம் தேசிய விருது வாங்கினாரா? எந்த படத்திற்கு தெரியுமா?

First Published | Aug 15, 2024, 9:41 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரம், தனது திரைப்பயணத்தில் பல விருதுகளை வென்றுள்ளார். ஆனால், அவர் ஆஸ்கார் அல்லது தேசிய விருதுகளை வென்றாரா என்பது பல ரசிகர்களுக்குள் எழும் கேள்வி. அப்படி வென்றிருந்தால் எந்த படத்திற்காக, எந்த விருதை வென்றார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

List of National Awards Received by Vikram

ஒவ்வொரு நடிகருக்கும் திரைக்கதை எந்தளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அவர்களுக்கு ஆஸ்கர் மற்றும் தேசிய விருது முக்கியம். திரைக்கதைக்கு ஏற்ப தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி அதற்குரிய அங்கீகாரத்தை பெற விரும்புவார்கள். அப்படிப்பட்ட நடிகர்களில் சியான் விக்ரம் எந்த படத்திற்காவது ஆஸ்கர் விருதோ, தேசிய விருதோ வாங்கியிருக்கிறாரா? அப்படி வாங்கியிருந்தால் எந்த படத்திற்கு வாங்கியிருக்கிறார்? எந்த விருது வாங்கியிருக்கிறார் என்று பார்க்கலாம் வாங்க.

List of awards Received by Vikram

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். கடந்த 1990 ஆம் ஆண்டு திரைக்கு வந்த என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இவரது தந்தை ஜான் விக்டர் என்ற வினோத் ராஜ். சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கிறார். மலையூர் மம்பட்டியான், கொடி பறக்குது, கில்லி, தம்பி, அரவாண் என்று பல படங்களில் நடித்திருக்கிறார்.

Tap to resize

Chiyaan Vikram

விக்ரம் சினிமா பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகளும் கிடைத்தது. இதே போன்று தான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தற்போது சினிமாவில் காலூன்றி வருகிறார். இது ஒருபுறம் இருக்க, விக்ரம், மீரா, காவல் கீதம், சேது, ஐ, அந்நியன், சாமி, அருள், மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் – 1, பொன்னியின் செல்வன் – 2 என்று பல படங்களில் நடித்துள்ளார்.

Thangalaan Movie Review

இந்தப் படங்களைத் தொடர்ந்து தனது 61ஆவது படமான தங்கலான் படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் பார்வதி, மாளவிகா மேனன், பசுபதி ஆகியோர் பலர் நடிப்பில் உருவான இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

Chiyaan Vikram Thangalaan

இதுவரையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் விக்ரம் 60 படங்களில் நடித்துள்ளார். இந்த 60 படங்களில் விக்ரம் நடிப்பில் வந்த பிதாமகன் படத்திற்கு மட்டுமே தேசிய விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் மூலமாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

National Film Award

இதே போன்று தெய்வ திருமகள் மற்றும் ஐ ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டது. மேலும், சேது, பிதாமகன், ராவணன் ஆகிய படங்களுக்காக தமிழ்நாடு மாநில விருதுகள் வழங்கப்பட்டது. ஆனால், ஒரு படம் கூட ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படவில்லை. உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள தங்கலான் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு வெற்றி பெறும் என்று எதிர்பார்கப்படுகிறது.

Latest Videos

click me!