இதை மட்டும் ஜெயலலிதாவால் கட்டுப்படுத்தவே முடியாதாம்! சந்தோஷமா இருந்தால் என்ன செய்வாங்க தெரியுமா?

Published : Aug 15, 2024, 09:12 PM IST

பிரபல நடிகையும், தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாகவும் விளங்கிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பற்றி பலரும் அறிந்திடாத ஒரு சுவாரஸ்ய தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.  

PREV
15
இதை மட்டும் ஜெயலலிதாவால் கட்டுப்படுத்தவே முடியாதாம்! சந்தோஷமா இருந்தால் என்ன செய்வாங்க தெரியுமா?
South Indian Actress Jayalalithaa

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் சுமார் 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஜெயலலிதா. தன்னுடைய கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும் என ஆசை பட்ட ஜெயலலிதாவுக்கு அந்த கனவு மட்டும் நிறைவேறாமல் போனது. இவருக்கு 16 வயது இருக்கும் போதே... 'வெண்ணிற ஆடை' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, முதல் படத்திலேயே... குளியல் சீன், ஸ்லீவ் லெஸ் உடை அணிந்து நடித்து, தன்னுடைய கவர்ச்சியால் இளவட்ட ரசிகர்களை கவர்ந்தார்.
 

25
Jayalalithaa and MGR Pair with 28 Films

பின்னர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் ஜெயலலிதாவை தேடி வர, நடிப்பில் கவனம் செலுத்தியதால் கடைசி வரை இவரால் படிப்பை தொடர முடியாமல் போனது. புரட்சி தலைவர் எம்ஜிஆருடன் மட்டும் சுமார் 28 படங்களில் நடித்துள்ள ஜெயலலிதா,  முத்துராமன், ஜெயசங்கர், சிவாஜி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு இவர் அரசியலில் கவனம் செலுத்த துவங்கிய போது, சிலர் ஜெயலலிதாவுக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் தான் அரசியலில் நுழைந்தார் என பேசினார்.

ஜெயலலிதாவின் முதல் பட அனுபவத்தில் மறைந்திருக்கும் ரகசியம்! திரையரங்கை விட்டு வெளியேற்றியதன் பின்னணி?
 

35
Jayalalithaa Reject Rajinikanth Billa Movie

இதனையே கேள்வியாக கேட்டு ஒரு ரசிகர் கடிதம் எழுத, அதற்க்கு பதில் அளித்த ஜெயலலிதா... அரைசியலில் நுழைந்தால் மக்கள் பணிக்கு மாறி விட வேண்டும். தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இல்லை. ரஜினியின் பில்லா பட வாய்ப்பை நிராகரித்ததாக பதில் எழுதி இருந்தார். 
 

45
Jayalalithaa Interview

இந்நிலையில் ஜெயலலிதாவிடம் 1970-ம் ஆண்டு, பத்திரிகை பேட்டி ஒன்றில் ''நீங்கள் சந்தோஷமாக இருந்தால் செய்யக்கூடிய விஷயம் என்ன? என்று பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்ப...  அதற்கு ஜெயலலிதா "என் மனம் குதூகலம் அடையும்போது, நான் என்னையே அறியாமல் வாயால் விசில் அடிக்கத் தொடங்கிவிடுவேன். இந்த பழக்கத்தை விட்டொழிக்க, நான் பல முறை நினைத்தது உண்டு. ஆனால், முடியவில்லை.

மயோசிட்டிசால் திரையுலகில் இருந்து விலக நினைத்த சமந்தா.! மீட்டெடுத்த 5 விஷயங்கள்..!
 

55
Jayalalithaa Habit

ஒரு சமயம் மைசூர் பிருந்தாவனத்துக்கு என் தோழியுடன் சென்றிருந்தேன்.பிருந்தாவனத்தின் இயற்கை எழில்.. என் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கவைத்தது. என்னையும் அறியாமல் விசில் அடிக்கத் தொடங்கிவிட்டேன். அப்படியே விசில் அடித்துக்கொண்டே எவ்வளவு தூரம் நடந்திருப்பேனோ தெரியவில்லை. ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.  என்ன ஆச்சர்யம்… ஒரு மாணவர் கூட்டமே என் பின்னால் என்னைக் கேலி செய்து கொண்டு பின்னால் வந்தனர். இதை சற்றும் எதிர்பாராத நான் திடுக்கிட்டவாறே ,வெட்கத்துடன் என் தோழியை அழைத்துக்கொண்டு ஓடிப் போய் காரில் அமர்ந்துகொண்டேன். இதை இன்று நினைத்தால் வெட்கமாகத்தான் இருக்கிறது"  என்று பதிலளித்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories