
தமிழ் சினிமாவில் நயன்தாரா எப்படி ஹீரோயினை மையப்படுத்திய கதைகளை தேர்வு செய்து அதனை ஹிட் கொடுக்கிறாரோ அதே போன்று வருவதற்கு ஆசைப்பட்டு ரகு தாத்தா படத்தை தேர்வு செய்து நடித்த கீர்த்தி சுரேஷிற்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ரகு தாத்தா படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
மாயா, நானும் ரௌடி தான், டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், ஐரா, கொலையுதிர் காலம், மூக்குத்தி அம்மன், ஓ2, காத்துவாக்குல ரெண்டு காதல், அன்னபூரணி என்று ஹீரோயினை மையப்படுத்திய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். இதில் ஒரு சில படங்கள் சொதப்பினாலும் மற்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றன.
இந்த படங்கள் தவிர இவரது நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2, மஹாராணி, டியர் ஸ்டூடண்ட்ஸ், மண்ணாங்கட்டி என்று பல படங்களில் நடித்து வருகிறார். இவரைப் போன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து தோல்வி கொடுத்த நடிகைகளின் பட்டியலில் தற்போது கீர்த்தி சுரேஷூம் இடம் பெற்றுள்ளார்.
ஏற்கனவே த்ரிஷா ஹீரோயினுக்கான கதை தேர்வு செய்து தோல்வி அடைந்தார். அதில், நாயகி படத்தை சொல்லலாம். தற்போது வெப் சீரிஸில் ஹீரோயினுக்கான கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதே போன்று தான் கீர்த்தி சுரேஷும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார்.
ஆனால், நயன்தாராவைப் போன்று கீர்த்தி சுரேஷிற்கு ஹீரோயின் கதை ஒன்றும் பெரிதாக பேசப்படவில்லை. கதை தேர்வு செய்வதில் தவறு ஏற்படுகிறதா அல்லது கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் அவருக்கு பொருத்தமாக அமைவதில்லை என்பது குறித்து தெரியவில்லை. ஆனால், அவர் சாணிக் காகிதம், சைரன் ஆகிய தோல்வி படங்களை கொடுத்த நிலையில் தற்போது ரகு தாத்தா படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனம் பெற்று வருகிறது. படத்தின் டைட்டிலோ ஏக் காவ் மே ஏக் கிஷான் ரகு தாத்தா (ரஹ்தாதா) என்று காமெடியாக சொல்வது போன்று இருக்கும் அல்லவா, அது போன்ற ஒரு டயலாக். அதுமட்டுமின்றி மகாநடி படத்தில் வருவது போன்ற அதே மாதிரியான ஒரு தோற்றம்.
இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் ரகு தாத்தா. இந்தப் படத்தில் இவருடன் இணைந்து எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் ஆகியோர் பலர் நடிப்பில் உருவான படம் தான் ரகு தாத்தா. இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தி எதிர்ப்பு படமான ரகு தாத்தா திரைக்கு வந்தது.
ஆனால், இந்தப் படத்துடன் இணைந்து தங்கலான், டிமாண்டி காலனி 2 ஆகிய படங்களும் திரைக்கு வந்த நிலையில், இந்தப் படத்திற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்கவில்லை. படமும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
வள்ளுவன்பேட்டை என்ற கிராமத்தில் இந்தியே இருக்க கூடாது என்ற கொள்கையுடன் வாழ்பவர் தான் சென்ட்ரல் இந்தியன் வங்கியின் வள்ளுவன்பேட்டை கிளை வங்கி ஊழியர் கயல்விழி (கீர்த்தி சுரேஷ்). மேலும், கா பாண்டியன் என்ற புனைப்பெயரில் கதைகள் எழுதி வெளியிடும் ஒரு எழுத்தாளரும் கூட.
ஒரு கட்டத்தில் வீட்டு சூழல் காரணமாக திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். அந்த திருமணம் பிடிக்காமல், அதிலிருந்து தப்பிக்க நிறைய திட்டம் தீட்டுகிறார். இதற்காக இந்தி எதிர்ப்பு கொள்கையிலிருந்து பின் வாங்குகிறார். அதன் பிறகு அவரது திருமணம் நடந்ததா? அவரது கொள்கை என்ன ஆனது என்பது தான் ரகு தாத்தா.
என்னதான் காமெடி, செண்டிமெண்ட் படமாக ரகு தாத்தா இருந்தாலும் இன்றைய காலகட்டத்திற்கான படமாக ரகு தாத்தா இல்லை. இதற்கு முன்னதாக மறைந்த பழம்பெரும் நடிகையான சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் தான் கீர்த்தி சுரேஷிற்கு ஒர்க் அவுட்டானது. நடிகையை முன்னணியாக கொண்ட படம் எதுவும் கீர்த்தி சுரேஷிற்கு ஒர்க் அவுட் ஆகவில்லை.