'Thodarum' movie OTT release: Watch it on Jio Hotstar
தருண் மூர்த்தி இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த படம் தொடரும். இப்படம் கடந்த ஏப்ரல் 25ந் தேதி திரைக்கு வந்தது. இதில் மோகன்லால் ஜோடியாக ஷோபனா நடித்திருந்தார். சமீபத்திய மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக துடரும் மாறியுள்ளது. ஒரு மாதத்தில், மலையாள பாக்ஸ் ஆபிஸில் பல வசூல் சாதனைகளை இந்தப் படம் முறியடித்துள்ளது. இப்படம் தற்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.
24
மோகன்லாலின் தொடரும் திரைப்படம்
இப்படத்தில் ஷண்முகம் என்ற டாக்ஸி ஓட்டுநராக மோகன்லால் நடித்துள்ளார். பினு பாபு, ஃபர்ஹான் ஃபாசில், மணியன்பிள்ள ராஜு உள்ளிட்ட பல புதுமுகங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் நிஷாத் யூசுப், ஷெஃபிக் வி பி, இசை ஜேக்ஸ் பிஜாய், நிர்வாக தயாரிப்பாளர் அவந்திகா ரஞ்சித், ஒலி வடிவமைப்பு விஷ்ணு கோவிந்த், கலை இயக்கம் கோகுல் தாஸ். கே.ஆர். சுனிலின் கதைக்கு தருண் மூர்த்தியும் கே.ஆர். சுனிலும் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
34
தொடரும் திரைப்படத்தின் வசூல்
உலகளவில் தொடரும் ரூ.230.45 கோடி வசூலித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கேரள பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்த படமாக தொடரும் ஏற்கனவே மாறியிருந்தது. கேரளாவில் அதிக காட்சிகள் திரையிடப்பட்ட படம் என்ற சாதனையை தொடரும் படைத்துள்ளது. ஐந்தாவது வார இறுதியில், கேரளாவில் 45,000 காட்சிகள் திரையிடப்பட்டதாக படத்தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். மோகன்லாலின் புலிமுருகன் படத்தின் ஒன்பது ஆண்டு சாதனையை தொடரும் முறியடித்துள்ளது.
இந்நிலையில் தொடரும் திரைப்படம் ஓடிடி ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ள ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம், அதன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மே 30ந் தேதி தொடரும் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. தியேட்டரில் வரவேற்பை பெற்ற இப்படம் ஓடிடியில் எந்த அளவு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.