மே மாதம் தமிழ் சினிமாவுக்கு சக்சஸ்புல்லாக இருந்துள்ளது. இம்மாத தொடக்கத்திலேயே டூரிஸ்ட் பேமிலி, ரெட்ரோ என இரண்டு ஹிட் படங்கள் வந்துள்ளன. இதையடுத்து மே 16ந் தேதி சூரி நடித்த மாமன் திரைப்படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. கடந்த வாரம் திரைக்கு வந்த விஜய் சேதுபதியின் ஏஸ் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், மே 30ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
மே 30ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள்
வருகிற மே 30ந் தேதி 5 சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதன்படி டி.ஆர்.பாலா இயக்கத்தில் முகென் ராவ் நடித்த ஜின் படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அதேபோல் பிரபு நாயகனாக நடித்த ராஜபுத்திரன் படமும் மே 30ந் தேதி ரிலீஸ் ஆகிறது. அதேபோல் ராம் இந்திரா இயக்கிய மனிதர்கள் படமும் மே 30ந் தேதி தான் திரைக்கு வருகிறது. மகேஷ் வைஷ்ணவி, பாக்கியராஜ் நடித்த ஆண்டவன் படமும் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. இதுதவிர கராத்தே கிட் மற்றும் தி வெர்டிக்ட் ஆகிய படங்களும் மே 30ந் தேதி திரைகாண உள்ளது.
34
ஓடிடி ரிலீஸ் தமிழ் படங்கள்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் இந்த மாதம் 1ந் தேதி திரைக்கு வந்தது. இப்படம் திரையரங்குகளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிபெற்றது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இப்படம் வருகிற மே 31ந் தேதி ஓடிடிக்கு வருகிறது. அதேபோல் வானில் தேடினேன் என்கிற திரைப்படமும் இந்த வாரம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.
இந்த வாரம் ஓடிடியிலும் சில பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதன்படி நானி நடிப்பில் கடந்த மே 1ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ஹிட் 3 திரைப்படம் மே 29ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகி 200 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அள்ளிய துடரும் திரைப்படமும் மே 30ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.