ஜெய்பீம்ல வர்ற மாதிரி தான் என்னையும் அடிச்சாங்க... மு.க.ஸ்டாலின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய சூர்யா படம்

First Published Mar 3, 2023, 2:43 PM IST

முதல்வர் ஆனதும் சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தை பார்த்ததாகவும், அப்படம் பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் ஜெய் பீம். நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆன இப்படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கி இருந்தார். 1993-ல் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் மீது பொய் வழக்கு போட்டு அவரை போலீசார் அடித்தே கொன்றனர். அவருக்காக அவரது மனைவி போராடி நீதி பெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தான் ஜெய் பீம் திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.

தமிழகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இப்படத்தில் பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் கதாபாத்தில் சூர்யா நடித்திருந்தார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் ரிலீஸ் ஆகி, அப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து பழங்குடியினருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு முழுவீச்சில் செய்து இருந்தது. அதுமட்டுமின்றி நடிகர் சூர்யாவும் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்விக்காக ரூ.1 கோடி வழங்கி இருந்தார்.

இதையும் படியுங்கள்... தலைவன் வந்துட்டாண்டா... லெஜண்ட் படத்துக்கு ஓடிடியில் இவ்வளவு டிமாண்டா..! அதகளப்படுத்தும் அண்ணாச்சி ரசிகர்கள்

இந்நிலையில், சமீபத்தில் நீயா நானா கோபிநாத் யூடியூப் சேனல் ஒன்றிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் நேர்காணல் ஒன்றை நடத்தி இருந்தார். அப்போது அவரிடம் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துகொண்டார். அதில் நீங்கள் முதல்வர் ஆக பொறுப்பேற்ற பின்னர் பார்த்த திரைப்படம் எது என கோபிநாத் கேட்டதற்கு, சூர்யா நடித்த ஜெய் பீம் என பதிலளித்தார் மு.க.ஸ்டாலின்.

அதுமட்டுமின்றி அப்படம் தனக்குள் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஜெய் பீம் படம் பார்த்த பிறகு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன். ஏனெனில் பொய் வழக்கு போட்டு ஒரு கைதியை ஜெயில்ல அடச்சு. போலீஸ் எந்த அளவுக்கு காட்டுத்தனமாக நடத்தியது, கொடுமைப்படுத்தியது என்பதை பார்த்து ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன்.

அதற்கு காரணம் என்னவென்றால், நான் மிசால இருந்தப்போ, நானும் அந்த கொடுமையை அனுபவிச்சேன். அந்த படம் பார்க்கும்போது அது நினைவுக்கு வந்தது. அதனால படம் முடிஞ்ச உடனே சூர்யாவுக்கு போன் பண்ணி பாராட்டினேன். இயக்குனரையும் அழைத்து பாராட்டினேன். அதுதான் நான் முதலமைச்சர் ஆனபிறகு பார்த்த முதல் படம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார் மு.க.ஸ்டாலின்.

இதையும் படியுங்கள்... 7 ஹீரோயின்களை பாடாய்படுத்திய பிரபுதேவா... ரசிகர்களை மகிழ்வித்தாரா? - பஹீரா படத்தின் விமர்சனம் இதோ

click me!