பழம்பெரும் நடிகையான ஜெயக்குமாரி, அந்த காலத்திலேயே கவர்ச்சி நாயகியாக வலம் வந்து ரசிகர்களை வசீகரித்தவர். தற்போது 70 வயதுக்கு மேல் ஆகும் இவர், தனது மகனுடன் வேளச்சேரியில் வசித்து வந்துள்ளார். அதுவும் வாடகை வீடு தானாம். ஆறு வயது முதலே சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் தனது 14 வயதில் தமிழ் திரையுலகில் வெளியான நாடோடி படத்தின் மூலம் அறிமுகமாகினார். நடிப்பதைவிட சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு அதிக சம்பளம் கொடுத்ததால் அதில் ஆர்வம் செலுத்தி வந்துள்ளார் ஜெயக்குமாரி.
நூற்றுக்கு நூறு, தேடி வந்த லட்சுமி, மாணிக்கத் தொட்டில், இவள் ஒரு சீதை, எங்கிருந்தோ வந்தால், வைரம், ரிக்ஷாக்காரன், பிஞ்சு மனம் உள்ளிட்ட பல பிளாக் பாஸ்டர் தமிழ் படங்களில் தோன்றியுள்ளார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போனது. தனியார் மருத்துவமனையில் வைத்தியம் பார்க்கும் அளவுக்கு பணம் இல்லாததால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் ஜெயக்குமாரி.
இதையும் படியுங்கள்... ராதிகாவிற்காக இனியாவை விட்டு கொடுக்கும் கோபி? பாக்கியலட்சுமியில் இனிவரப்போவது !