உள்ளாடை தெரிய உச்சகட்ட கவர்ச்சி... ரம்யா பாண்டியனை விட கிளாமர் தூக்கலா போஸ் கொடுத்து தெறிக்கவிட்ட தர்ஷா குப்தா

First Published | Sep 18, 2022, 7:16 PM IST

Dharsha Gupta : சட்டை பட்டனை கழட்டிவிட்டு உள்ளாடை தெரிய படுகவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி தர்ஷா குப்தா, நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

நடிகை தர்ஷா குப்தா, விஜய் டிவியில் ஒளிபரப்பான செதூரப்பூவே என்கிற சீரியலின் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் தர்ஷா. அந்நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர் பட்டாளமும் பெரிதானது. சீரியலில் அடக்க ஒடுக்கமாக பாவாடை தாவணி அணிந்து வந்தாலும், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு அதகளம் செய்திடுவார் தர்ஷா.

இதன்பலனாக இவருக்கு சினிமாவிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்த படம் ருத்ரதாண்டவம். திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கிய இப்படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்தார் தர்ஷா. முதல் படத்திலேயே திறம்பட நடித்து பாராட்டுக்களையும் பெற்றார் தர்ஷா.

இதையும் படியுங்கள்... ஒன்றல்ல.. இரண்டல்ல... அரை டஜன் படங்களுக்கு மேல் டபுள் ஆக்‌ஷனில் மிரட்டிய அஜித் - முழு லிஸ்ட் இதோ

Tap to resize

இதையடுத்து தற்போது ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர யோகிபாபுவுடன் இணைந்து மெடிக்கல் மிராக்கிள் என்கிற படத்திலும் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் தர்ஷா. மேலும் சில பட வாய்ப்புகளும் அவருக்கு குவிகின்றன.

இவ்வாறு படங்களில் பிசியான போதும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் தர்ஷா. அதன்படி தற்போது சட்டை பட்டனை கழட்டிவிட்டு உள்ளாடை தெரிய படுகவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. சமீபத்தில் நடிகை ரம்யா பாண்டியன் உள்ளாடை மட்டும் அணிந்து போட்டோஷூட் நடத்தி இருந்தார். அவருக்கு போட்டியாக தான் தர்ஷா தற்போது இவ்வாறு போட்டோஷூட் நடத்தி உள்ளதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஹாலிவுட் தரத்தில் தயாராகும் ‘மர்டர் லைவ்' படத்தில் சைக்கோ கொலையாளியாக மிரட்டும் வினய்... வைரலாகும் பர்ஸ்ட்லுக்

Latest Videos

click me!