மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சிறு வயதில் வாழ்ந்த... கேரளா மற்றும் இலங்கையில் உள்ள வீட்டை பார்த்திருக்கீங்களா?

First Published | Feb 25, 2023, 6:59 PM IST

மறைந்த முதலமைச்சரும், அரசியல்வாதியும், நடிகருமான எம்ஜிஆர் இலங்கையில் வாழ்ந்த வீட்டின் புகைப்படமும், கேரளாவில் சில காலம் வாழ்ந்த வீட்டின் புகைப்படமும், வெளியாகி அவருடைய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்கிற இயற்பெயரைக் கொண்ட எம்ஜிஆர், இலங்கையில் கண்டி அருகே உள்ள நாவலப்பட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன் மற்றும் சத்யபாமா ஆகியோருக்கு ஐந்தாவது மகனாக பிறந்தவர்.

இவருடைய தந்தை மருதூர் கோபாலன் மேனன் வழக்கறிஞர் ஆவார். பின்னர் அந்தமானில் உள்ள சிறையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தார். தினமும் பல குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்கும் பணியில் இருக்க வேண்டாம் என மனைவி கூறியதால், அந்த வேலையை விட்டு விட்டு, ஒரு சிங்கள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்தார்.

பிரமாண்டமாக நடந்த 'பகாசூரன்' சக்ஸஸ் மீட்! மோகன். G க்கு 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த தயாரிப்பாளர்!

Tap to resize

எம்ஜிஆர், கடைசி மகன் என்பதால் பெற்றோருக்கு மிகவும் செல்லம். இவருக்கு பெயர் வைத்ததில் கூட ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. கோபாலன் தன்னுடைய தந்தை சந்திரசேகரன் மேனன் என்ற பெயரில் இடம்பெறும் சந்திரன் என்கிற பெயரையும், சத்தியபாமாவின் தந்தை பெயரான சீதாராமன் நாயர் என்பதில் ராம என்பதையும் சேர்த்து ராமச்சந்திரன் என பெயர் வைத்தார்.

mgr magan

எம்ஜிஆரின் தந்தை மறைவுக்கு பின்னர், அவருடைய ஒரு அண்ணன் மற்றும் அக்காவும் இலங்கையில் இறந்த காரணத்தால்.. அங்கிருந்து கிளம்ப முடிவு செய்த சத்தியபாமா, தன்னுடைய பிள்ளைகளுடன் கேரளாவிற்கு வந்தார். தாண்டிய கணவரின் பங்கை கொடுக்கும் படி, கணவரின் குடும்பத்திடம் கேட்டபோது, அவர்கள் கொடுக்க மறுத்ததால், தன்னுடைய தாயார் சரஸ்வதியுடன் வாழ்ந்தார்.

ஸ்போட்ஸ் டே போட்டியில் வெற்றி கோப்பையோடு நிற்கும் மகன் போட்டோவை பகிர்ந்து பெருமைப்படும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

எம்ஜிஆரின் தந்தை மறைவுக்கு பின்னர், அவருடைய ஒரு அண்ணன் மற்றும் அக்காவும் இலங்கையில் இறந்த காரணத்தால்.. அங்கிருந்து கிளம்ப முடிவு செய்த சத்தியபாமா, தன்னுடைய பிள்ளைகளுடன் கேரளாவிற்கு வந்தார். தாண்டிய கணவரின் பங்கை கொடுக்கும் படி, கணவரின் குடும்பத்திடம் கேட்டபோது, அவர்கள் கொடுக்க மறுத்ததால், தன்னுடைய தாயார் சரஸ்வதியுடன் வாழ்ந்தார்.

குடும்ப வறுமையின் காரணமாக, பள்ளி படிப்பை விட்டு விட்டு... தன்னுடைய அண்ணன் சக்கரபாணியுடன் மேடை நாடகங்களில் கவனம் செலுத்த துவங்கினார் எம்.ஜி.ஆர். பின்னர் திரைப்பட வாய்ப்பையும் கைப்பற்றி முன்னணி நடிகராக உயர்ந்தார். நடிகை தாண்டி, தயாரிப்பாளர், இயக்குனர், என பன்முக திறமையோடு விளங்கிய எம்.ஜி.ஆர். எம்ஜிஆர் காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலும் இணைந்தார்.

கண்ணீரில் மூழ்கிய பி.வாசு குடும்பம்! முக்கிய பிரபலம் காலமானார்..!

திரைத்துறையை தாண்டி அரசியலிலும் இறங்கி தீவிர அரசியல்வாதியாக மாறிய எம்.ஜி.ஆர். மூன்று முறை, முதலமைச்சராக இருந்தவர். தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்து இன்று வரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர். இவர் வாழ்ந்த வீட்டின் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

எம்ஜிஆர் தன்னுடைய தந்தையுடன் இலங்கையில் வாழ்ந்து வந்த வீடும், கேரளாவில் தன்னுடைய பாட்டி, அம்மாவுடன் வாழ்ந்த வீடும் தற்போது வரை பொக்கிஷத்தை போல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  சற்றும் சிதையாமல் அப்படியே இருக்கும் வீட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

கமல்ஹாசனை தொடர்ந்து... போதையற்ற தமிழ்நாடு இயக்கத்திற்கு ஆதரவளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Latest Videos

click me!