பல இயக்குனர்கள், தங்கள் திரைப்படம் மூலம் வெளிப்படுத்த தயங்கும் சர்ச்சைக்கான கதைகளை கூட மிகவும் தைரியமாக இயக்கி, பின்னனர் தன்னுடைய பத்திற்கு எதிராக எழும் சர்ச்சைகளுக்கும் அசால்டாக பதிலடி கொடுத்து வருபவர் இயக்குனர் மோகன்.ஜி.
26
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.G இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'பகாசூரன்'.
இந்த படத்தில், பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்திருந்தார். இதற்க்கு முன் இவர், பீஸ்ட், சாணி காகிதம், நானே வருவேன் போன்ற படங்களில் நடித்திருந்தாலும், இந்த படமே இவர் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படமாக அமைந்தது.
46
இப்படத்தை தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் மூலம் தயாரித்திருந்தார். தொடர்ந்து இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் வெற்றியை படக்குழு, கோலாகலமாக கொண்டாடியுள்ளது.
மேலும் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட GTM Presents நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம் இயக்குனர் மோகன் G க்கு தங்க மோதிரம் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கினார்.
66
கே போல் படக்குழுவினருடன் கேக் வெட்டி 'பகாசூரன்' வெற்றியை கொண்டாடினர். இவர்களுடன் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.