வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் இணைந்துள்ள அஜித் 61வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அசுரன் படப்புகழ் மஞ்சு வாரியர் நடிக்கிறார். ஜான் கோக்கன், நடிகர் வீராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். வீரா' என தலைப்பு வைக்கப்படும் என கூறப்படும் இந்த திரைப்படத்தில், இரட்டை கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.