இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்றதன் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இந்நிகழ்ச்சியின் போது சக போட்டியாளரான கவினை காதலித்த லாஸ்லியா, பின்னர் அவரை பிரேக் அப் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பட வாய்ப்புகள் குவிந்ததால், நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் லாஸ்லியா. இவர் நடிப்பில் முதலாவதாக வெளியான படம் பிரெண்ட்ஷிப். இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார் லாஸ்லியா. கடந்தாண்டு வெளியான இப்படம் தோல்வியை தழுவியது.
இதையடுத்து கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்த கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்தார். இது மலையாளத்தில் ஹிட்டான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் லாஸ்லியா. கடந்த சில வாரங்களுக்கு முன் ரிலீசான இப்படம் படுமோசமான விமர்சனங்களைப் பெற்று பிளாப் ஆனது.
அடுத்தடுத்த படங்கள் ஃபிளாப் ஆனதால் சோகத்தில் இருந்த லாஸ்லியாவுக்கு மேலும் வருத்ததத்தை தரும் விதமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யட்டது. அதில் லாஸ்லியா ரகசியமாக வைத்திருந்த புகைப்படத்தை லாஸ்லியா லீக்ஸ் என்கிற பெயரில் வெளியிட்டு ஹேக்கர்கள் கைவரிசை காட்டினர். அந்த புகைப்படத்தில் நடிகை லாஸ்லியா மிகவும் ஒல்லியான தோற்றத்துடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஹேக்கர்கள் வசம் இருந்து இன்ஸ்டாகிராம் பக்கம் மீட்கப்பட்டதும், முதல் வேலையாக அந்த போட்டோவை டெலிட் செய்துவிட்டார் லாஸ்லியா.
இதையும் படியுங்கள்... KGF 2 வெற்றியால் சம்பளத்தை மளமளவென உயர்த்திய ஸ்ரீநிதி ஷெட்டி- இதெல்லாம் ரொம்ப ஓவர் என தெறித்தோடிய தயாரிப்பாளர்