'என்னை டோட்டலா டேமேஜ் பண்ணிட்டார்'..தன்னை பின்னுக்கு தள்ளிய பிரபலம் பற்றி குமுறிய தனுஷ்! .

Kanmani P   | Asianet News
Published : May 30, 2022, 03:14 PM ISTUpdated : May 31, 2022, 09:06 AM IST

இன்றைய முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ் மேடையில் மூத்த நடிகர் குறித்து பேசியுள்ள விஷயம் வைரலாகி வருகிறது.

PREV
14
'என்னை டோட்டலா டேமேஜ் பண்ணிட்டார்'..தன்னை பின்னுக்கு தள்ளிய பிரபலம் பற்றி குமுறிய தனுஷ்!  .
dhanush

துள்ளுவதோ இளமை துவங்கி கிரே மேன் வரை ரசிகர்களை குதூகலப்படுத்தி வருபவர் நடிகர் தனுஷ். இவர் சமைப்பதில் நடித்திருந்த அத்ராங்கி ரே என்னும் பாலிவுட் திரைப்படம் இந்தி, தமிழ் என இரு பக்கமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல மாறன் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்ட ரசிகர்களின் பார்வையை ஈர்த்திருந்தது.

24
dhanush

இதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், டோலிவுட்டில் வாத்தி, ஹாலிவுட்டில் தி கிரே மேன் என பட்டையை கிளப்பி வருகிறார் தனுஷ். `அவர் தற்போது சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி சமீபத்தில் தன்னை இயக்கிய இயக்குனர்கள் மற்றும் தனது தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார் தனுஷ்.

34
dhanush

முன்னதாக தனுஷ் தான் நடித்த அனேகன் குறித்து பேசியுள்ள சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.  இப்படத்தில் தனுஷ் , கார்த்திக் மற்றும் அமைரா தஸ்துரின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆஷிஷ் வித்யார்த்தி , ஐஸ்வர்யா தேவன் , முகேஷ் திவாரி மற்றும் ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். நான்கு வெவ்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்ட, இது மறுபிறவியின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. 

44
dhanush

இந்த படம் குறித்து பேசிய தனுஷ், அதாவது அனேகன் படத்தின் நடிக்கும் போது “கார்த்திக்கின் துள்ளலே மக்களை இவரிடம் கொண்டு வந்து சேர்க்கும் அப்படி பட்டவருடன் நடிக்கும் போது நாமும் கொஞ்சம் இன்னும் மெனக்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார். அதோடு டைலாக் டெலிவரி குறித்து சரி டப்பிங்கில் பார்த்துக்கலாம் என்று நினைக்கும் போது அங்கேயும் அவர் என்னை ஓவர்டேக் பண்ணியிருவார். மொத்தத்தில் என்னை டோட்டலா டேமேஜ் பண்ணிட்டார் என்று தனுஷ் கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories