90ஸ் இளசுகளின் மனதில் நீங்கா இடம் பிடித்த மீரா ஜாஸ்மின். சண்டைக்கோழி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வந்து ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். ஆயுத எழுத்து, ரன்,உள்ளிட்ட படங்களிலும் கவர்ந்த இவர் தன் கவர்ச்சியாலும் மலைக்க வைத்திருந்தார்.
25
Meera Jasmine
மலையாள திரை உலகிலும் பிரபலமாக இருந்து வந்த மீரா ஜாஸ்மின் திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கி விட்டார். இதன் பின்னர் பல ஆண்டுகளாக கேமராவிற்கு முன் வராத இவர் சில மாதங்களுக்கு முன்னர் நகைக்கடையில் ரசிகர்களால் புகைப்படம் எடுக்கப்பட்டார். அந்த புகைப்படத்தில் மிகவும் உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் மாறி இருந்தார் மீரா ஜாஸ்மின்.
இது குறித்தான புகைப்படங்கள் வைரலாகி விமர்சனங்களுக்கு உள்ளானது. இதை அடுத்து திடீர் என சமூக வலைதளத்திற்கு என்ட்ரி கொடுத்த மீரா ஜாஸ்மின் தனது மொத்த உடல் எடையையும் கரைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டார்.
படங்களிலும் கமிட்டாக தொடங்கிய மீரா ஜாஸ்மின், அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகவே ஈர்த்து வருகிறது. இந்த படங்களில் கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே இருந்து வருகிறது.
விதவிதமான ஷார்ட் உடைகளிலும் ஹார்ட் போஸ் கொடுத்து இளசுகளின் மனதை கொள்ளையடித்து வரும் மீரா ஜாஸ்மின் தற்போது ஒர்க் அவுட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். கண்ணாடி முன்னாள் நின்றபடி சூடேற்றுகிறார் மீரா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.