தெலுங்கு திரையுலகில் மிகவும் திறமையான நடிகை என்றும் அதிஷ்டக்கார நடிகை என்றும் பெயரெடுத்த பூஜா ஹெக்டேவின் தங்கைகளுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாக [பார்க்கப்பட்டு வருகிறது.
இன்று தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2010 போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது ரன்னர் அப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
27
இவர் முதலில் அறிமுகமானதே... இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் தான். ஆனால் முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைத்ததால் தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.
வேறு வழியின்றி தெலுங்கு திரையுலகின் பக்கம் சென்ற இவருக்கு... ஏறு முகமாகவே இருந்தது. இவர் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த தமிழ் படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
47
எனவே தெலுங்கு திரைப்படத்தை தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொஹென்ஜோ தாரோ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.