மாஸ்டரும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து கமலின் விக்ரம் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த படத்தை ராஜ்கமல் இன்டர்நெஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. முன்னதாக வெளியான தெலுங்கு படங்கள் அளவிற்கு தமிழ் படங்களின் வெற்றி அமையவில்லை என விமர்சனம் எழுந்து வந்த நிலையில் விக்ரம் அத்தனை விமர்சனங்களையும் தொம்சம் செய்து ரூபாய் 400 கோடிக்கு மேல் வசூலை குவித்து மாஸ் காட்டியது. விஜய் சேதுபதி, பகத் பாஸில், சூர்யா என நட்சத்திர பட்டாளங்கள் குவிந்த இந்த படத்தை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.
மேலும் செய்திகளுக்கு...சாதிவெறி பிடித்தவள் என விமர்சிக்கிறார்கள்.. இரவின் நிழல் நாயகியின் உருக்கமான பேட்டி!
கமலின் நான்கு வருட இடைவெளிக்கு பின் வெளியான இந்த படம் அவரின் சிறந்த படங்களில் முதல் இடத்தை பிடித்து விட்டது. அதோடு உலக அளவில் 300 கோடிக்கு மேல் வசூல் பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார் கமலஹாசன். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு விலை உயர்ந்த கார் மற்றும் துணை இயக்குனர்களுக்கு பைக்குகளை கொடுத்த கமலஹாசன் சூர்யாவிற்கு விலை உயர்ந்த ஸ்மார்ட் வாட்சை பரிசாக கொடுத்திருந்தார்.