சம்பளத்தை உயர்த்திய சூர்யா?..வெளியான சுவாரஸ்ய தகவல்

Published : Jul 18, 2022, 08:01 PM IST

சூர்யா குறித்தான புதிய அப்டேட் ஆக அவரது சம்பளத்தை உயர்த்தி விட்டார் என கூறப்படுகிறது. அதாவது இவர் அடுத்ததாக நடிக்க உள்ள வாடிவாசல் படத்திற்கு ரூ. 28 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
14
சம்பளத்தை உயர்த்திய சூர்யா?..வெளியான சுவாரஸ்ய தகவல்
SURIYA

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா தற்போது தமிழில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் தோன்றி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார் சூர்யா. இதற்கிடையே இவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம்  இன்று வரை வெற்றி கொண்டாட்டத்தில் உள்ளது.

24
SURIYA

முன்னதாக சூர்யாவின் சூழரைப்போற்று, இது தொடர்ந்து ஜெய்பீம் என அடுத்தடுத்த படங்கள் ஓடிடி  வெளியாகின. இதனால் போதுமான வெற்றிகளை காணவில்லை. சூர்யா பின்னாள்களில் இந்த படம் பேசப்பட்டாலும், வெளியான பொழுது போதுமான வரவேற்பு பெறவில்லை.

மேலும் செய்திகளுக்கு...சாதிவெறி பிடித்தவள் என விமர்சிக்கிறார்கள்.. இரவின் நிழல் நாயகியின் உருக்கமான பேட்டி!

இதையடுத்து கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதம் தெரிவித்த சூர்யா விக்ரம் படத்திலும், சூரரை போற்று ஹிந்தி ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சூர்யா மாதவனின் ராக்கேட்ரி படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்திற்காக இவர் சம்பளம் எதையும் பெறவில்லை என நடிகர் மாதவன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

34
SURIYA 41

இதை அடுத்து பாலாவின் இயக்கத்தில் 41வது படத்தில் நடித்து வந்தார்.  இந்த படத்திற்கு வணங்கான் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை அடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா இணைய உள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட இந்த படம்  குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில் பாலா உடன் சூர்யா கைகோர்த்த சமயத்தை படத்தின் போட்டோ சூட் நடத்தப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...பிளாக் அண்ட் ஒயிட்டில் போல்ட் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே..வைரல் போட்டோஸ் இதோ! 

44
Sruiya

இந்த படத்திற்காக சென்னை அருகில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு செட் அமைக்கப்பட்டு அங்கு நாயகன் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.  அதோடு வாடிவாசல் படத்திற்காக காளைகளை வாங்கி சூர்யா அதனுடன் பழகி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தான  வீடியோவை சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...திரைப்பட டிஜிட்டல் திருட்டு ..அதிரடியாக களம் இறங்கிய அருண் விஜய்!

தற்போது சூர்யா குறித்தான புதிய அப்டேட் ஆக அவரது சம்பளத்தை உயர்த்தி விட்டார் என கூறப்படுகிறது. அதாவது இவர் அடுத்ததாக நடிக்க உள்ள வாடிவாசல் படத்திற்கு ரூ. 28 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories