வயநாடு நிலச்சரிவு.. மீனா, குஷ்பூ உள்ளிட்ட 80'ஸ் நடிகைகள் முதல்வரை சந்தித்து நிவாரண நிதி வழங்கினர்!

First Published | Aug 10, 2024, 11:39 AM IST

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு, தமிழ் சினிமாவை சேர்ந்த 80'ஸ் முன்னணி நடிகைகள், முதல்வர் பினராயி விஜயனை சந்தைத்தி நிதி வழங்கி உள்ளனர்.
 

Wayanad Landslide

கேரள மாநிலம் வயநாட்டில், கடந்த மாதம் ஜூலை 30ஆம் தேதி, திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் பாறைகள் மக்கள் குடியிருப்பு மீது விழுந்தது மட்டுமின்றி, மண் சரிவு ஏற்பட்டு 3 கிராமங்கள் மண்ணில் புதைந்தது.

380 People died this disaster

ஒட்டு மொத்த இந்தியாவையும், அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில்... இதுவரை 350 க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்தும், பலத்த காயங்களுடனும் உயிரிழந்துள்ளனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர், தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கவர்ச்சி உடையில்... மனதை மயக்கும் மயிலாஞ்சி! நடிகை அனு இமானுவேலின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

Tap to resize

Chennai Flood

இயற்கையின் சீற்றாதால், ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளா வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்ப்பட்ட சேதங்களை சீர் செய்து, மக்கள் மீண்டும் இழல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், இந்த நிலச்சரிவு பல உயிர்களை சூறையாடி, மக்களின் மனத்தில் ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிட்டது.

landslide relief fund

நிலச்சரிவால் 3 கிராமமே நிலைகுலைத்து போன நிலையில், இதன் பாதிப்பு சுமார் 5000 கோடி அளவுக்கு இருக்கும் என கூறப்படுகிறது. வயநாட்டை சேர்ந்த ஏராளமான மக்கள், தற்போது தங்களின் உடமை, உறவு, வீடு போன்றவற்றை பறிகொடுத்துள்ள நிலையில், பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவுகள், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

நாக சைதன்யா மீதான காதலை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்திய சோபிதா துலிபாலா! வைரலாகும் இன்ஸ்ட்டா பதிவு!

80's Heroine give Relief Fund:

மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே பிரபலங்கள் மற்றும் வசதி படைத்த பலர் தங்களால் முடிந்த நிதியை கொடுத்து வரும் நிலையில், தற்போது 80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்த சுகாசினி, மீனா, குஷ்பூ, லிசி ஆகியோர் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து கேரள மக்களுக்கான நிவாரண நிதியை வழங்கி உள்ளனர்.

1 Crore Fund Relief:

1 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கியுள்ள இவர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அடுத்தடுத்து பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேடி சென்று கதை சொன்ன விஜய் மகன் ஜேசன் சஞ்சய்! என்னால் நடிக்க முடியாது.. சூரி கூறிய அதிர்ச்சி காரணம்!

Latest Videos

click me!