திரையரங்குகளில் வார வாரம் புதுப்படங்கள் ரிலீஸ் ஆவதைப் போல் ஓடிடி தளங்களிலும் புதுப்படங்கள் அணிவகுத்து வந்த வண்ணம் உள்ளனர். ஓடிடியின் வளர்ச்சியால், தற்போது ஓடிடி தளங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜீ5, சோனி லிவ், ஆஹா என பல்வேறு ஓடிடி தளங்கள் உள்ளன. அதில் வருகிற மே 23ந் தேதி என்னென்ன திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆகின்றன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
25
ஹார்ட் பீட் சீசன் 2
ஹார்ட் பீட் வெப் தொடரின் முதல் சீசனுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து அதன் இரண்டாவது சீசன் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த வெப்தொடர் மே 22ந் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதிலும் தீபா பாலு, அனுமோல், யோகலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரை தீபக் சுந்தர்ராஜன் இயக்கி உள்ளார். இதன் எபிசோடுகள் தற்போது ஸ்ட்ரீம் ஆகி வருகின்றன. இதன் முதல் சீசன் மொத்தம் 100 எபிசோடுகளை கொண்டிருந்தது.
35
வல்லமை
தமிழ் சினிமாவில் இதுவரை காமெடி நடிகராகவே பார்க்கப்பட்டு வந்த பிரேம்ஜியின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த படம் தான் வல்லமை. இப்படத்தை கருப்பையா முருகன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிகேவி இசையமைத்துள்ள இப்படத்திற்கு கணேஷ் குமார் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இப்படம் மே 23ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடித்த திரைப்படம் சுமோ. இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து இருந்தார். இப்படம் கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில், வருகிற மே 23ந் தேதி முதல் சுமோ திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
55
மற்ற மொழி படங்கள்
மலையாளத்தில் அபிலாசம் என்கிற திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதேபோல் தெலுங்கில் நதிசரமி என்கிற திரைப்படம் ஈடிவி வின் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.