சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'மாவீரன்' திரைப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்று காலையிலேயே ரசிகர்களுடன் சேர்ந்து FDFS பார்த்த சிவகார்த்திகேயன், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்து வரும் ரெஸ்பான்ஸை கண்டு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். முதல் பகுதி, சிவகார்த்திகேயன் - யோகிபாபு காம்பினேஷனில் மிகவும் காமெடியாக உள்ளதாகவும், இரண்டாம் பாகம் ரோலர் கோஸ்டர் எமோஷனுடன் இருப்பதாகவும் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.
இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்காவிட்டாலும், அவரின் பங்கு 'மாவீரன்' படத்திற்கு மிகவும் முக்கியமானது. சிவகார்த்திகேயன் டக்கு டக்குனு வானத்தை பார்த்து விட்டு ருத்ர தாண்டவம் ஆடுவார் இல்லையா, அது விஜய் சேதுபதியின் குரலை கேட்ட பிறகு தான். இந்த படத்தில் குரல் கொடுப்பதற்காக விஜய் சேதுபதி பெற்ற சம்பளம் குறித்த தகவலை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.