மேலும் ஒரு சில சமயங்களில், இவர் கூறிய கருத்துகளுக்கு எதிராகவும் சிலர் பேசியதால், பிக்பாஸ் வீடு பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஷரிக்குடன் இணைந்து டான்ஸ் ஆடினார் அனிதா சம்பத். சிறுவயதில் இருந்து எந்த ஒரு டான்ஸ் பயிற்சியும் பெறாமல், அனைவரையும் அசர வைத்து ஃபைனலுக்கு முன்னேறியது மட்டும் இன்றி டைட்டில் வின்னர் ஆகவும் மாறினார்.