இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தான் தற்போது தமிழ் சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது இவர் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதமாக வெளியிடும் புகைப்படங்களும் வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
தன்னுடைய முதல் படத்தை மிகவும் தெளிவாக தேர்வு செய்து... நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்திருந்தார் அதிதி. முத்தையா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் கிராமத்து கதையம்சம் கொண்ட படம் என்றாலும், நடிப்பில் ரசிகர்களை அசரவைத்தார்.
முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டி தூக்கிய 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் படத்தில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அதிதி.
அதாவது அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் தான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு அழகு அட்ராசிட்டி செய்து வரும் அதிதி... தற்போது பச்சை மற்றும் ஆரஞ்சு நிற லெஹன்கா உடையில் சைடு போஸ்... லோ அங்கிள் போஸ் என கொடுத்து ரசிகர்களை நிலை குலைய வைத்துள்ளார். இந்த போட்டோஸ் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.