Published : May 31, 2025, 02:36 PM ISTUpdated : May 31, 2025, 04:03 PM IST
இளம் நடிகை ஒருவர் சிம்புவை காதலித்து வருவதாகவும், அவருடன் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் இணையத்தில் தகவல் ஒன்று தீயாய் பரவி வரும் நிலையில், அது குறித்து சம்பந்தட்ட நடிகை விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் தற்போது கமலுடன் இணைந்து ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக தனது 49-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சிம்புவின் காதல் குறித்து பல வதந்திகள், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் செய்திகளில் இடம் பிடிப்பது வழக்கம்தான். அந்த வரிசையில் தற்போது நிதி அகர்வாலுடன் அவர் காதலில் விழுந்துள்ளதாக வதந்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது.
23
சிம்பு - நிதி அகர்வால் காதல்?
இந்த வதந்திகள் குறித்து பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ள நிதி அகர்வால், “ஜெயம் ரவியுடன் தமிழில் ‘பூமி’ படத்தில் நடிக்க கமிட்டான போது சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு படங்களும் வெளியாவதற்கு முன்பாகவே உதயநிதி ஸ்டாலினின் ‘கலகத் தலைவன்’ படத்திலும் வாய்ப்பு கிடைத்தது. திரைத்துறை என்று வந்து விட்டாலே அவர்களை பற்றி வதந்திகள் வருவது சகஜம்தான். மக்களுக்கும் இந்த வதந்திகள் குறித்து ஆர்வம் இருப்பதால் அது வேகமாக பரவுகிறது. அதை எல்லாம் நான் பொருட்படுத்தப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.
33
நிதி அகர்வால் விளக்கம்
31 வயதாகும் நிலையில் 10 படங்களில் மட்டுமே நடித்ததற்கான காரணம் குறித்து கேட்டதற்கு, “ஒரே நேரத்தில் பல படங்களில் ஒப்பந்தம் ஆகிவிட்டு அதன் பின்னர் காணாமல் போவதற்கு நான் விரும்பவில்லை. பொறுமையாக காத்திருந்து நல்ல கதைகளையும், நல்ல படங்களிலும், பெரிய நடிகர்களுடனும் நடித்து வருகிறேன்” எனக் கூறியுள்ளார். பவன் கல்யாண் நிதி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிரபாஸுடன் ரொமான்டிக் ஹாரர் படமான ‘ராஜா சாப்’ படத்திலும் நிதி அகர்வால் நடித்து வருகிறார்.