பொதுவாகவே ஹாலிவுட் படங்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருப்பது வழக்கம். கற்பனைக்கு எட்டாத கனவு உலகங்கள், மாயாஜாலங்கள், உலகைத் தாண்டிய விந்தைகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவிடுவர். ‘அவதார்’ தொடங்கி ‘லார்ட் ஆஃப் ரிங்க்ஸ்’ வரை பல உதாரணங்களைக் கூறலாம். ஆனால் இந்த படங்களுக்கு எல்லாம் தாய்ப்படம் ஒன்று இருக்கிறது. அதுதான் ‘ஹாரி பாட்டர்’. சுமார் ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், உலக அளவில் ரூ.63,000 கோடி வசூலை வாரி குவித்தது.
25
7 புதினங்களாக வெளியான ‘ஹாரி பாட்டர்’
‘ஹாரி பாட்டர்’ திரைப்படம் பிரிட்டானிய எழுத்தாளர் ஜே.கே ரௌலிங் என்பவரால் எழுதப்பட்டது. இது ஏழு புதினங்களின் தொகுப்பாகும். ஆக்வாட்ஸ் மந்திரவாத பள்ளியில் பயிலும் ஹாரி பாட்டர் மற்றும் அவரது நண்பர்களான ரொனால்ட் வீஸ்லி மற்றும் ஹெர்மாயினி க்ரேஞ்சர் ஆகியோரின் சாகசங்களை இந்த தொடர் விவரிக்கிறது. இந்த கதையின் கரு மந்திரவாத உலகத்தை வெல்லுவது, மந்திரவாதிகள் அல்லாதவர்களை ஆளுமைக்கு உட்படுத்துவது, எதிரிகளை அழிப்பது, சாகா வரம் பெறுவது ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டது.
35
வராலற்று சாதனை படைத்த நாவல்
மேலும் வோல்டாமார்ட் என்கிற கொடிய மந்திரவாதியை தோற்கடிக்க ஹாரி பாட்டர் மேற்கொள்ளும் முயற்சிகளையும் விவரிக்கிறது. ஹாரி பாட்டர் நாவலானது 73 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஜூலை 2013 நிலவரப்படி இந்த புதினங்கள் 45 கோடி பிரதிகள் வரை விற்று சாதனை படைத்துள்ளது. இத்தொடரின் இறுதி நான்கு புதினங்கள் வரலாற்றிலேயே மிக விரைவாக விற்பனையான நூல்கள் என்கிற சாதனையையும் படைத்துள்ளன. அழியாப் புகழ் பெற்ற இந்த நாவல், படமாக எடுக்கப்பட்டு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.
45
வசூலில் தொடர் சாதனை நிகழ்த்திய ஹாரி பாட்டர்
2001-ம் ஆண்டு தொடங்கி 2011-ம் ஆண்டு வரை இந்த படத்தின் அடுத்த அடுத்த பாகங்கள் வெளியாகின. 2001-ம் ஆண்டு ‘ஹாரி பாட்டர் அண்ட் தி பிலாசப்பர்ஸ் ஸ்டோன்’ என்கிற முதல் பாகம் வெளியாகி, உலக அளவில் 317 மில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்தது. 2002-ம் ஆண்டு ‘ஹாரி பாட்டர் அண்ட் தி சேம்பர் சீக்ரெட்ஸ்’ படம் 261.99 டாலரையும், 2004-ம் ஆண்டு வெளியான ‘பிரிசனர் ஆஃப் அஸ்கபான்’ படம் 249 மில்லியன் டாலரையும் வசூலித்தது.
55
ரூ.63,910 கோடி வசூல்
தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் 290 மில்லியன் டாலர்களை வசூலித்தன. 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் இறுதி அத்தியாயம் 2 பாகங்களாக வெளியானது. இந்த இரண்டு பாகங்களுமே சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை குவித்தன. அனைத்து பாகங்களின் வசூல்களையும் சேர்த்துப் பார்த்தால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.63,910 கோடியை ‘ஹாரி பாட்டர்’ வசூலித்திருந்தது. உலக அளவில் இத்தனை கோடி வசூலை குவித்து, பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்த பெருமை ஹாரி பாட்டரையேச் சேரும்.