ஓடிடியில் வெளியானது 'தொடரும்' திரைப்படம்.! படம் எப்படி இருக்கு?

Published : May 31, 2025, 09:45 AM IST

திரையில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற ‘துடரும்’ (தமிழில் ‘தொடரும்’) திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

PREV
15
பெரும் வரவேற்பு பெற்ற ‘தொடரும்’ திரைப்படம்

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் வெளியான ‘எம்புரான்’ திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து இவர் ‘தொடரும்’ படத்தில் நடித்திருந்தார். தருண் மூர்த்தி இயக்கிய இந்த படத்தில் நடிகை சோபனா கதாநாயகியாக நடித்து இருந்தது. படம் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.

25
‘தொடரும்’ திரைப்படத்தின் கதை

திரைப்படங்களில் ஒரு காலத்தில் ஸ்டண்ட் உதவியாளராக பணிபுரிந்து தற்போது பழைய அம்பாசிடர் காரை ஓட்டி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார் சண்முகம் (மோகன்லால்). கார் மீது உயிரையே வைத்து இருக்கிறார். தன்னைத் தவிர வேறு யாரும் காரை ஓட்டக்கூடாது என கண்டிஷனுடன் இருக்கிறார். இருப்பினும் அவரது மகனின் நண்பர்கள், சண்முகத்துக்கு தெரியாமல் அவரது காரை எடுத்து ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்குகின்றனர்.

35
திரில்லர் படமாக மாறும் இடம்

எனவே காரை மெக்கானிக் கடையில் பழுது பார்க்க சண்முகம் கொடுக்கிறார். மெக்கானிக் கடையில் வேலை செய்து வரும் இளைஞர் செய்யும் காரியத்தால் சண்முகத்தின் கார் போலீஸாரால் பறிமுதல் செய்யப்படுகிறது. அதுவரை அமைதியாக சென்று கொண்டிருந்த இந்த திரைப்படம், அந்த இடத்தில் திரில்லர் படமாக மாறுகிறது. சண்முகத்திற்கு கார் திரும்ப கிடைத்ததா? சண்முகம் என்னென்ன பிரச்சனைகளில் சிக்கினார்? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

45
‘தொடரும்’ படத்தின் பாசிட்டிவ், நெகட்டிவ்

அமைதியாக தொடங்கி பின்னர் திரில்லராக மாறுவது ரசிக்கும்படியாக உள்ளது. பல காட்சிகள் யூகிக்கும்படி இருந்தது இருப்பினும் எந்த இடத்திலும் சளிப்போ, தொய்வோ ஏற்படவில்லை. தேவையில்லாத வசனங்கள், அதீத ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாதது படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. ஆனால் ‘த்ர்ஷியம்’ போன்ற ஒரு ஷார்ப் ஆன திரைக்கதை இல்லாதது ஏமாற்றமே. இடைவேளைக்குப் பின்னர், படத்தின் இரண்டாம் பாடம் மிக நீளமாக செல்வது சோர்வை ஏற்படுத்துகிறது.

55
ஓடிடியில் வெளியான ‘தொடரும்’

‘த்ரிஷ்யம்’ படம் போல் புத்திசாலித்தனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆக்ஷன் காட்சிகள் இந்த படத்தில் அதிகம் நிறைந்துள்ளன. மலையாள படங்களை ரசிப்பவர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை தராது. ஒருவேளை தமிழ், தெலுங்கு படங்களில் வரும் ஆக்ஷன் காட்சிகளை மனதில் வைத்து படம் பார்ப்பவர்களின் பொறுமையை இந்த படம் சோதிக்கலாம். தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் படம் வெளியாகி இருக்கிறது. தமிழிலும் பார்த்து ரசிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories