பலிக்காத மாரியின் மேஜிக்; படு மோசமான தோல்வியை தழுவிய 'பைசன்' எங்கு தெரியுமா?

Published : Oct 29, 2025, 04:25 PM IST

Bison shocking failure: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான 'பைசன் காளைமாடான்' திரைப்படம் படு தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

PREV
14
தாழ்த்தபட்டவர்களின் கதை:

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தை பற்றியும், மறைக்கப்பட்ட அவர்களின் அவலங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் இயக்குனர்கள் அடுத்தடுத்து தலைதூக்கி வருகிறார்கள். அந்த வகையில், வெற்றிமாறன், பா ரஞ்சித், மற்றும் மாரி செல்வராஜுக்கு மிகப்பெரிய பங்குண்டு.

24
பைசன் திரைப்படம்:

மாரி செல்வராஜ் 'வாழை' படத்தை தொடர்ந்து, விக்ரமின் மகன் துருவை கதாநாயகனாக வைத்து, ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இயக்கி இருந்த திரைப்படம் 'பைசன்'. இந்த படம் அக்டோபர் 17-ஆம் தேதி தமிழில் ரிலீஸ் ஆனது. இதில் துருவுக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்க, ரஜீஷா விஜயன், அழகம் பெருமாள், லால், பசுபதி, அமீர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். Applause Entertainment மற்றும் Neelam Studios இணைந்து தயாரித்திருந்தார்.

34
மணத்தி கணேசனின் வாழ்க்கை படம்:

தமிழக மண்ணை, கபடி விளையாட்டின் மூலம் தலைநிமிர செய்து அர்ஜுனா விருதை பெற்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை படமாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. ரூ.30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.100 கோடி வசூலை எட்டி இருக்கும் 'பைசன்' படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பு காரணமாக தெலுங்கிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர்.

44
தெலுங்கில் படுதோல்வி:

அதன்படி, அக்டோபர் 24-ஆம் தேதி இந்த படம் தெலுங்கானா மற்றும் ஆத்திர மாநிலத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் ஸ்போர்ட்ஸ் டிராமா என்பதால் நிச்சயம் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழுவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதாவது இந்த படத்தில் இடம்பெற்ற சில குறியீடுகள் மற்றும் வசனங்கள் தெலுங்கு ரசிகர்களை கவரவில்லை. எனவே இப்படம் அங்கு பெரும் தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. மாரியின் மேஜிக் தெலுங்கு ரசிகர்களிடம் பலிக்கவில்லை என்பதே பலரின் கருத்தாகவும் உள்ளது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories