இயக்குனராக ஒரு படம் ஹிட் கொடுப்பதே சவாலாக இருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் தொடர்ந்து 5 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ஜீரோ பிளாப் இயக்குனரை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கோலிவுட்டில் தோல்வியே சந்திக்காத இயக்குனர் என்று சொன்னதும் அனைவருக்கும் நினைவில் வருவது அட்லீ, லோகேஷ் கனகராஜ் மற்றும் வெற்றிமாறன் தான். இவர்கள் எல்லாம் பெரிய பெரிய ஜாம்பவான்களை இயக்கி பேமஸ் ஆனவர்கள். ஆனால் தான் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் கதையையே ஹீரோவாக நினைத்து இயக்கி தொடர்ச்சியாக ஐந்து பிளாக்பஸ்டர் வெற்றிகளை குவித்த ஒரு இயக்குனரைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அவரின் படங்கள் வந்தால் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அந்த அளவுக்கு அழுத்தமான கதையம்சத்துடன் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
25
தாக்கத்தை ஏற்படுத்திய பரியேறும் பெருமாள்
அந்த இயக்குனர் வேறுயாருமில்லை மாரி செல்வராஜ் தான். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த பரியேறும் பெருமாள் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அப்படத்தில் இளம் நட்சத்திரங்களான கதிர் மற்றும் ஆனந்தி தான் நடித்திருந்தார்கள். தென்மாவட்டங்களில் நடக்கும் சாதிய ஒடுக்குமுறைகளை அப்படத்தில் தோலுரித்துக் காட்டி இருந்தார் மாரி செல்வராஜ். பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் தமிழ் சினிமாவைத் தாண்டி மற்ற மொழியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
35
வாகை சூடிய கர்ணன்
பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து தனுஷ் உடன் கூட்டணி அமைத்த மாரி, அவரை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். அதிகார வர்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து போராடும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞனின் கதை தான் இந்த கர்ணன். இப்படம் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. மாரி செல்வராஜ் இயக்கிய ஒரு முன்னணி நடிகரின் படம் என்றால் அது கர்ணன் தான். இதையடுத்து உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்கிற படத்தை இயக்கினார். அரசியலில் நடக்கும் சாதிய பாகுபாட்டை வெளிச்சம் போட்டு காட்டியது மாமன்னன்.
ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த மாரி செல்வராஜ், நான்கவதாக தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சோக சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கிய படம் தான் வாழை. சிறு வயதில் தான் கடந்த வந்த வலிகளையும், சிறுவயதில் தன்னுடைய அக்காவை பறிகொடுத்த வேதனை மிகுந்த கதையை படமாக எடுத்து அனைவரின் கண்களையும் குளமாக்கினார். வாழை படத்தின் கிளைமாக்ஸ் பார்த்து அழாத ஆட்களே இல்லை. அந்த அளவுக்கு எமோஷனலாக இருந்தது. அப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார் மாரி. அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
55
ஹிட் அடித்த பைசன்
இதையடுத்து ஐந்தாவதாக நடிகர் விக்ரமின் மகன் துருவ்வை வைத்து ஒரு கபடி வீரரின் வாழ்க்கையை படமாக்கினார். அர்ஜுனா விருது வென்ற கபடி வீரரான மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து அவர் இயக்கிய படம் தான் பைசன் காளமாடன். அப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதன்மூலம் கோலிவுட்டில் தொடர்ச்சியாக ஐந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து ஹீரோ பிளாப் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் மாரி செல்வராஜ்.