'சியான் 63' படத்தில் விக்ரமுக்கு ஜோடி போடும்... விஜய் பட ஹீரோயின்! அட இவங்களா?

Published : Oct 29, 2025, 02:55 PM IST

Chiyaan 63 Heroine: நடிகர் விக்ரம் அடுத்ததாக தன்னுடைய 63-ஆவது படத்திற்கு தயாராகி வரும் நிலையில், இந்த படத்தின் கதாநாயகி பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

PREV
14
ஹிட் கொடுக்க போராடும் விக்ரம்:

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்வு செய்து நடித்து, பிரபலமானவர் சியான் விக்ரம். பல வருடங்களாக ஒரு ஹிட் படத்தை கொடுக்க போராடி வந்தாலும், தமிழக ரசிகர்கள் மத்தியில் இவருக்கான மார்க்கெட் சற்றும் குறையவில்லை. கடைசியாக இவர் நடிப்பில், வெளியான 'வீர தீர சூரன்' கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே போல் முதலுக்கு மோசம் இல்லாத லாபத்தையும் தயாரிப்பாளருக்கு பெற்று கொடுத்தது.

24
மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம்:

இதை தொடர்ந்து, விக்ரம் தற்போது தன்னுடைய 63-ஆவது படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை, தன்னுடைய முதல் படமான 'மண்டேலா' படத்திலேயே தேசிய விருதை பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்க உள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

34
எகிற வைக்கும் எதிர்பார்ப்பு:

தற்போது வரை இந்த படத்தின் கதை, மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிற விவரங்கள் எதுவும் அதிகார பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் இது“உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரிஸ்க் எடுத்து பல்வேறு கெட்டப்புகளில் நடித்து அசத்திய விக்ரம், இந்த படத்தில் எப்படி பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பார் என்கிற ஆர்வமும் அதிகரித்துள்ளது.

44
விக்ரமுக்கு ஜோடியாகும் இளம் நடிகை:

இதற்கு முன்பு, மடோன் அஸ்வின் இயக்க 'மண்டேலா' மற்றும் 'மாவீரன்' ஆகிய படங்கள் சமூக கருத்துக்களை கொண்டவையாக இருந்தது. அதே போல் இந்த படமும் முக்கிய விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க கூடிய படமாக இருக்கும் என, கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த படம் குறித்து அடுத்தடுத்து சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக, தமிழில் 'கோட்' படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்த மீனாட்சி செவுத்திரி நடிக்க உள்ளாராம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories